செவ்வாய், 29 மே, 2018

புகைப்பதை நிறுத்த 6 வழிகள், 6வது வழி செம்ம !

புகைப்பதை நிறுத்த 6 வழிகள், 6வது வழி செம்ம !

மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகளை விட புகைப்பதினால் ஏற்படும் விளைவுகள் மோசமானது.
புகைப்பதை எளிதில் நிறுத்துவது கடினம். ஆனால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் புகைப்பதை நிறுத்த முடியும்.
1. டார்க் சாக்லேட்:
புகைப்பதினால் நம் மூளையில் ஏற்படும் சில விளைவுகள் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் பெறலாம். புகையிலையில் உள்ள நிக்கோட்டின் ஏற்படுத்தும் விளைவுகளை டார்க் சாக்லேடில் உள்ள டொப்பமைன் ஏற்படுத்துகிறது. புகை பிடிக்கும் நேரத்தில் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள்.
2. யோகா பயிற்சி:
உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை விரும்பும் அனைவருக்கும் யோகா பயிற்சி ஒரு அற்புதமான மருந்து. யோகா பயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தம் குறைகிறது. புகைப்பதை தூண்டும் காரணிகளில் மன அழுத்தமும் ஒன்று. யோகா பயிற்சி மேற்கொண்டால் உங்கள் புத்தி கூர்மை பெறும். தினமும் யோகா பயிற்சிக்காக 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
3. உடற்பயிற்சி:
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உடற்பயிற்சி செய்வதால் இதற்கு முன் புகைத்ததால் உடலில் சேர்ந்துள்ள விஷத்தன்மையை போக்க முடியும். நடைப்பயிற்சி கூட புகை பழக்கத்தை மறக்க செய்கிறது. உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்றால் நடைப்பயிற்சி கூட செய்யலாம்.
4. இசை:
இசை கேட்பதால் நம் மனநிலையை மாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். புகை பற்றிய எண்ணம் மனதில் வரும்போதெல்லாம் சிகரெட்டுக்கு பதிலாக இசை கருவியை எடுங்கள். 10 - 15 நிமிடங்கள் இசை கேட்பதால் மனம் புகை பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம். இசை நரம்பு மண்டலத்தை சரி செய்து புகை பழக்கத்தை கைவிட உதவுகிறது.
5. பானங்கள்:
பானங்கள் அல்லது நீர் குடிப்பதால் உடலில் உள்ள அசுத்தங்கள் சுத்திகரிக்கப்படுகிறது. பானங்கள் அதிகமாக பருகுவதால் வயிறு நிரம்பியிருக்கும். இந்த நிலையில் பெரும்பாலும் யாரும் புகை பிடிக்க மாட்டார்கள்.
6. உறவு கொள்வது:

உறவு கொள்வதால் புகைப்பதை நிறுத்த முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. புகைப்பதினால் விந்தணுக்கள் பாதிக்கிறது. உறவு கொள்வதால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக