இரவில் சரியான தூக்கமில்லையா? அப்போ கண்டிப்பா இத படிங்க!
மனித நாகரிகம் வளர வளர நமது என்ற பழக்கவழக்கங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் தூக்கமின்மை.
நமது உடம்பிற்கு போதுமான ஓய்வு, நாம் இரவில் சரியாக தூங்குவதன் மூலம் மட்டுமே கிடைக்கிறது. முறையாக தூக்கம் இல்லாத போது பலவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இரவு நேரத்தில் படுத்ததும் தூக்கம் வருவதற்கு இந்த டீயை குடித்தால் நல்ல பயன் கிடைக்கும்.
வாழைப்பழ டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 5
தண்ணீர் – 1 கப்
இலவங்கப் பட்டை – சிறிதளவு
செய்முறை
வாழைப்பழத்தின் தோலை நன்றாக உரித்துக்கொண்டு , அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி அதனுடன் பத்து நிமிடம் நன்றாக கொதிக்க வையுங்கள்.
பின் அதில் சிறிதளவு இலவங்கப் பட்டையை சேர்த்து இறக்க வேண்டும். பின் தயார் செய்த வாழைப்பழ டீயை, வடிக்கட்டி உறங்கச் செல்லும் முன்பு குடிக்க வேண்டும்.
இந்த வாழைப்பழத்தில், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவு இருப்பதால், இவை இரவில் நமக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக