வியாழன், 31 மே, 2018

அதிக மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா ! இதோ இருக்கிறது தீர்வு...

அதிக மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா ! இதோ இருக்கிறது தீர்வு...


மனம் அமைதி இல்லாமல் பல்வேறு காரணங்களை மனதிற்குள்ளேயே வைத்துகொண்டு திணறிக்கொண்டிருக்கும் ஒருவித வெளிப்பாடுதான் மனஅழுத்தம். அது முதலில் சாதாரனமாக இருந்தாலும் மெல்ல உள நோயாக மாறும்போது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு இன்னல்களை ஏற்படுத்தக்கூடியது.

மனநோய்கள் ஆரம்பநிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக் கூடியவைதான். பல்வேறு மனஅழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணமாக இருக்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. தூங்க ஆரம்பித்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கனவு வருவதும், அதிகாலையில் விழிப்பதற்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு உறக்கத்திலும் அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும். இதுவும் மனஅழுத்தத்தின் ஒரு அறிகுறிதான்.   
மன அழுத்தத்தை குறைக்கும் சில உணவு வகைகளை கீழே காண்போம்!

மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம். இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். 
மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன. வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.
உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்ரா கிழங்குப் பொடி சேர்த்து, சூடாக அருந்தவும். நிம்மதியான தூக்கம் வரும். 

ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். மன அமைதியில் இருந்து சற்று விடுதலை கிடைக்கும்
மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது. 
தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரிடம்ன ஆலோசனை செய்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத்தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது. எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டும், செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மனஅழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை. 

மேற்கண்ட வழிமுறைகள் அழுத்தத்தைக் குறைக்குமே தவிர தீர்க்கும் வழிமுறை கிடையாது. இதனல , எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அவ்வப்போது நெருக்கமான நபர்களிடம் மனம் விட்டு பேசி , தூங்குவதற்கு முன்னர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை யோசித்து தீர்மானித்துவிட்டு சந்தோசமாக இருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே முற்றிலுமாக நீங்கள் விடுமட முடியும். முடிந்தவரை காலையில் எழுந்ததும் தியானத்தில் ஈடுபடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக