ஞாயிறு, 13 மே, 2018

'யூடியூப்' பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்...!!

'யூடியூப்' பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்...!!

1. யூடியூப் நிறுவனம் 14 பிப்ரவரி 2005 இல் நிறுவப்பட்டது.
2. 'பேபால்' ஊழியர்கள் மூவரால் யூடியூப் தளம் நிறுவப்பட்டது.
3. நவம்பர் 2006 இல் கூகிள் பதினாறாயிரம் கோடி ருபாய்க்கு (1.65 பில்லியன் டாலர்) யூடியூப் நிறுவனத்தை வாங்கியது.
4. 'மிருக்காட்சி சாலையில் நான்' என்பது தான் யூடியூில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ ஆகும். இதனை யூடியூபின் துணை நிறுவனர் பதிவேற்றினார்.
5. 'www.youtube.com' என்ற பெயரின் தேர்வு, இதேபோல் பெயரிடப்பட்ட  'www.utube.com' என்ற நிறுவனம் யூடியூப் மீது வழக்கு பதிவு செய்ய வழிவகுத்தது.
6. 80% அமெரிக்காவுக்கு வெளியே உள்ள மக்களே யூடியூப்-ஐ பயன்படுத்துகின்றனர்.
7. 'கங்க்னம் ஸ்டைல்', யூடியூபின் பார்வை எண்ணிக்கையை உடைக்கும் முதல் வீடியோ ஆகும்.
8. யூடியூப் இப்போது 75 மொழிகளில் கிடைக்கிறது.
9. செப்டம்பர் 1998 ல், கூகிள் நிறுவனத்திற்கு ஒரு பெண் தனது கேரேஜ் வலாகத்தை வாடகைக்கு கொடுத்தார். இப்போது அவர் யூடியூபின் 'சி.ஈ.ஓ.' ஆவார்.
10. யூடியூப் உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடு பொறியாகும்.
11. ஜஸ்டின் பீபீரின் 'பேபி' என்ற பாடல் தான் யூடியூப் வரலாற்றில் அதிகமாக டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ ஆகும்.
12. ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி மக்கள் யூடியூப்-ஐ மொபைல் ஃபோன் மூலமாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர்.
13. யூடியூபின் 60% மிகவும் பிரபலமான 1000 வீடியோக்கள் ஜெர்மனியில் தடைசெய்யப்பட்டுள்ளது.
14. 'முத்தமிடுவது எப்படி' என்பது தான் யூடியூபில் மிக அதிகமான தேடப்பட்ட பயிற்சி வீடியோ ஆகும்.
15. ஒரு வீடியோ பிடிக்கவில்லை என்றால் சராசரியாக 20% பார்வையாளர்கள் வீடியோவை 10 விநாடிக்குள் மூடிவிடுகின்றனர்.
16. யூடியூபின் அசல் யோசனை 'டேட்டிங்', மற்றும் 'ஹாட் ஆர் நாட்' என்பது தான் யூடியூபின் முதல் பெயர்.
17. இசை மற்றும் நடனம் வீடியோக்கள் தவிர, 'சார்லி பிட் மை ஃபிங்கர்' என்ற வீடியோ தான் மிக அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோவாக இருக்கிறது, இதன் பார்வை எண்ணிக்கை 86 பில்லியன் ஆகும்.
18. நீங்கள் 'டூ தி ஹார்லெம் ஷேக்' (டெஸ்க்டாப்பிற்கு மட்டும்) என்று யூடியூபில் தேடினால் என்ன நடக்கும் தெரியுமா? முயற்சி செய்து பாருங்கள்.
19. ஒரு நிமிடத்திற்கு 100 மணிநேரத்திற்க்கும் மேற்பட்ட வீடியோக்கள் யூடியூபில் பதிவேற்றப்படுகிறது.
20. வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய யூடியூப் யாரையும் அனுமதிப்பதில்லை, ஆனால் மக்கள் வீடியோக்களை பதிவிறக்கும் வழிகளையே அதிகமாக தேடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக