செவ்வாய், 29 மே, 2018

தினமும் தண்ணீர் குடித்தால் இதுதான் நடக்கும்!!!

தினமும் தண்ணீர் குடித்தால் இதுதான் நடக்கும்!!!

வெந்நீர் நம்முடைய வயிறு நிரம்பிய மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும்.ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு இருக்கிறதோ, இல்லையோ தண்ணீர் மிகவும் அவசியமானது. அதிலும் நிறைய மருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்
சில மக்கள் குளிர்ந்த நீரைத் தான் அதிகம் குடிக்க விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் அவற்றை விட சூடான தண்ணீர் தான் உடலுக்கு மிகவும் நல்லது.
1. எப்போது சுடு தண்ணீரை குடிக்கின்றோமோ, அப்போது உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புக்கள் கரைந்து, இரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.
2. சாப்பிடுவதற்கு முன்பு குடிக்கிற வெந்நீர் நம்முடைய வயிறு நிரம்பிய மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும்.
3. குளிந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும் அதை நம் உடல், தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால், கொழும்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இது தான்.
4. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதய நோயாளிகள், நாளொன்றுக்கு ஆயிரம் மி.லி. தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.
5. இருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். அவ்வாறு வலி ஏற்படும் போது சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, நீர்மமாக இருக்கும் சளி சற்று கெட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக