செவ்வாய், 29 மே, 2018

உலர் திராட்சையின் எண்ணற்ற மருத்துவ பலன்கள்.

உலர் திராட்சையின் எண்ணற்ற மருத்துவ பலன்கள்.

வணக்கம் நண்பர்களே. நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது உலர் திராட்சை பழங்களை பற்றித்தான். வாறுங்கள் பார்க்கலாம்.

ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

குழந்தைகளோ, பெரியவர்களோ... கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல சத்துக்களைக்கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் பலன்கள் எக்கச்சக்கம்.
@.திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் அதைவிட ஏராளமான சத்துக்களும் பலன்களும் இருக்கின்றன. உதாரணமாக, 100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. நாம் ஒரு வேளை சாப்பிடும் உணவின் அளவில் இருக்கும் கலோரிகளை, 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிட்டாலே பெற முடியும்.
@.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு திராட்சையைவிட அதிகம். இது, புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக, பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி நீங்கும்.

@.
இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். .தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும்.
@.வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்; தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.
@.இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வைக்குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக