ஞாயிறு, 27 மே, 2018

உங்களுக்கு இப்படி கனவு வருதா – கனவுபலன் – 7

உங்களுக்கு இப்படி கனவு வருதா – கனவுபலன் – 7 

ஆலயத்திற்குள் செல்வது போல கனவு கண்டால்,

நண்பர்களின் வட்டாரத்தில் அன்பும் ஆதரவும் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.
ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது போல கனவு கண்டால்,

எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கி கொண்டு அவதிப்படுவீர்கள். உங்களின் வளர்ச்சியை கெடுக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதை உணருங்கள். இறைவனை மனபூர்வமாக நம்புங்கள். சிக்கல்களிருந்து விடுபடவும், பணவிரயம் ஆகாமல் இருக்கவும் சிந்தித்து செயல் படுவது நல்லது.
இறைவனை கனவில் கண்டால்,

உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. பிரச்சனைகள் விலகி யோகங்கள் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமண தடை விலகி நல்ல வரன் அமையும். ஆபத்திலிருந்து தப்பித்து விடுவீர்கள்.
இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு கண்டால்,

லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பல பாக்கியங்களை பெற்று சுகமாக வாழ்வீர்கள்.

பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும்.
இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும்.
மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும்.
விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும்.
ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம்.  
சிலருக்கு கனவு கண்ட சில நாட்களிலேயே பலிக்கும்.

அன்பார்ந்த வாசகர்களே உங்கள் அனைவருக்கு கனவுபலங்களை பற்றி தற்சமையம் தெரிந்துக் கொண்டிருப்பீர்கள் தொடர்ந்து பலன்களை அறிய நமது பக்கத்தை பின்தொடர்ந்து செமித்து வைத்தும் படிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக