செவ்வாய், 29 மே, 2018

தமிழகத்தை நெருங்கவிருக்கும் நிபாஹ் வைரஸ், பீதியில் மக்கள்...

தமிழகத்தை நெருங்கவிருக்கும் நிபாஹ் வைரஸ், பீதியில் மக்கள்...

மிகப்பெரிய பேராபத்து ஒன்று தமிழகத்தை நெருங்க உள்ளது, அதுதான் 'நிபாஹ் வைரஸ்'. இந்த வைரசால் தமிழகத்தின் அருகிலுள்ள கேரளாவில் பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கேரளாவில் நிபாஹ் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, தமிழ்நாடு கேரளாவை ஒட்டி உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆகையால் இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவலாம் என அஞ்சப்படுகிறது.
நிபாஹ் வைரஸ் வெளவால்களிடம் இருந்துதான் பரவுகிறது. நிபாஹ் வைரஸ் முதன்முதலில் 1998 இல்  மலேசியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. மலேசியாவில் பன்றி மேய்க்கும் ஒருவர் காட்டிற்குள் ஒரு நாள் தன் பன்றிகளை மேய்த்து சென்றுள்ளார், அப்போது நிபாஹ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு வௌவால் கடித்த பழத்தை அவருடைய பன்றி தின்றுள்ளது. பின்னர் அந்த பன்றியிலிருந்து அவருக்கும் அந்த வைரஸ் பரவியுள்ளது. அதன் பிறகு அவரை சேர்ந்தவர்கள், குடும்பத்தினர் என எல்லோருக்கும் பரவியுள்ளது, இறுதியில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.
மலேசியா அரசு அந்த வைரஸால் பாதிக்க பட்டவர்களை தனிமைப்படுத்தி நிபாஹ் வைரஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.
பின்னர் 2004 இல் வங்காள தேசத்திலும் பரவியுள்ளது, அங்கேயும் பலர் அந்த வைரஸிற்கு  பலியானார்கள். தற்போது 2018 இல்  இந்தியாவிலும் அதுவும் கேரளாவிலும் பரவிவிட்டது. இந்த வைரஸை அழிப்பதற்கு எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு எந்த ஒரு சிகிச்சையும் இல்லை. நிபாஹ் வைரஸால் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இந்த வைரஸ் பரவி அவர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது தான் பயத்தை இன்னும் அதிகரிக்கிறது.
நிபாஹ் வைரஸ் அறிகுறிகள்:
  • அதிக காய்ச்சல்
  • மிகுந்த தலைவலி 
  • திடீர் மூச்சுத்திணறல்
  • தலைசுற்றல் 
  • மிகவும் குழப்பமான மனநிலை, (என்ன நடக்கிறதென்றே தெரியாத அளவு)
நிபாஹ் வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வழிகள்:
  • பாதி கடிக்கப்பட்ட பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டாம், தொடவும் வேண்டாம்.
  • சேதம் இல்லாத பழங்கள் மற்றும் காய்கறிளை நன்கு கழுவி சுத்தமாக உட்கொள்ளவேண்டும்.
  • மிருகங்களிடம் இருந்து விலகியே இருக்கவேண்டும்.
  • இந்த வைரஸ் காற்று மூலமாக பரவுகிறதா அல்ல தொடுதல் மூலமாக பரவுகிறதா என்பது யாரும் கண்டுபிடிக்கவில்லை, ஆகவே அனைவரிடமும் முடிந்த அளவு சற்று விலகியே இருங்கள்.
மேலும் இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து பன்றிக்கும், பன்றியிடம் இருந்து மனிதனுக்கும் பரவியுள்ளது. ஆகவே இது பாலூட்டிகளுக்கு மட்டுமே பரவும் என ஒரு தரப்பு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக