வெள்ளி, 11 மே, 2018

இந்த ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் : உங்க ராசி இருக்கா? இந்த ராசிக்காரர்கள் மிகவும் அதிபுத்திசாலிகளாம் !!



இந்த ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் : உங்க ராசி இருக்கா?
இந்த ராசிக்காரர்கள் மிகவும் அதிபுத்திசாலிகளாம் !!

🌟 ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருப்பதில்லை. ஒவ்வொரு நபருக்கும் அறிவும், திறமையும் வேறுபடும். அந்த வகையில் மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்களாம். அவர்களைப் பற்றி பார்ப்போம்.

மிதுனம் :

🌟 மிதுன ராசிக்காரர்கள் பல திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிரச்சனையின் ஒரு புறம் மட்டுமே பார்க்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவரை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம் :

🌟 சிம்ம ராசிக்காரர்கள் அறிவுத்திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும், இவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள். தங்களை ஏமாற்றுபவர்கள் மற்றும் மற்றவர்களது மனதில் எப்படிப்பட்ட எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எல்லாம் முழுமையாக அறிந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி :

🌟 சிக்கலான சூழ்நிலைகளை கூட சுலபமாக கையாளும் திறமை படைத்தவர்கள் யார் என்றால் கன்னி ராசிக்காரர்கள் தான். இவர்கள் ஒரு முடிவில் ஒரு படி எடுத்து வைக்கும் முன்னர் அதனை சுற்றி உள்ள அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து அதன் பின்னர் தான் முடிவு எடுப்பார்கள். முதலீடுகள் செய்வதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் பயம் அறியாதவர்கள் என்றே சொல்லலாம்.

துலாம் :

🌟 பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் சிறந்து விளங்குபவர்கள் துலாம் ராசிக்காரர்கள் தான். சிறந்த ஆலோசனை வழங்குவதால் மற்றவர்களும் இவர்களை தேடிவருவார்கள். இவர்களது பதில் திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும்.

கும்பம் :

🌟 சிறந்த புரிதல் குணம் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் சூழ்நிலைகளையும், அந்த சூழ்நிலையில் இரு தரப்பினர்களும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைப் பற்றிய முழுமையான புரிதலுடன் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை கேட்கக்கூடிய திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மீனம் :

🌟 மீன ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்வு ரீதியாக மற்றவர்களை புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். தங்களது உணர்வுகளை வெளிப்படையாக வெளிக்காட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்களது ஆறாம் அறிவானது இவர்கள் ஒரு சில கடினமான சூழ்நிலைகளை கையாளுவதற்கும், ஆபத்துக்களில் தப்பிக்கவும் உதவியாக இருக்கும்.
உங்கள் நிறுவனத்திற்கு திறமையான பணியாட்களை நிரப்ப விரும்புகிறீர்களா? எங்கள் நித்ரா வேலைவாய்ப்பு செயலி மூலம் உங்களுக்கு தேவையான பணியாட்களை எளிதில் நிரப்பிக்கொள்ள முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக