கோடைக்கு இதமான நீர் ஆகாரங்கள்...
வெயில் காலம் வந்ததும் அனைவரும் விரும்புவது உடலை ஜில்லென்று ஆக்கும் நீர் ஆகாரங்களைத் தான். அப்படிப்பட்ட சில நீர் ஆகாரங்களைப் பற்றி் இங்கே பார்க்கலாம்.
மண்பானைக் குடிநீர்
உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும் முதல் நீர் ஆகாரம் மண்பானைக் குடிநீர் .மண் பானை நீரில் உள்ள கெட்ட பொருட்களை அழிக்கும் தன்மை கொண்டது. மேலும் மண்பானையில் உள்ள துளைகளால் நீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. இதனால் நமக்கு சுத்தமான வெயிலுக்கு ஏற்ற குளிர்ந்த நீர் கிடைக்கிறது.
மோர்
வீட்டிலேயே மோர் எப்படி செய்வது?
தயிரை மிக்ஸியில் இரண்டு மூன்று சுற்றுகள் விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ள வேண்டும். இத்துடன் தேவையான அளவு நீர் , உப்பு , கருவேப்பிலை (கிள்ளி போட வேண்டும் ) , கொத்தமல்லி இலை மற்றும் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து ஊறவிட்டால் சுவையான வெயிலுக்கு இதமான மோர் கிடைத்து விட்டது.
கூழ்வகைகள்
கோடை காலம் ஆரம்பித்ததுமே ஆங்காங்கே நிறைய கூழ் கடைகளை நாம் பார்த்திருப்போம். மோர் போல கூழும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சிறந்த நீர் ஆகாரம் ஆகும்.இதில் கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் என்று வகை வகையாக உள்ளன.
இளநீர்
உடலை குளிர்ச்சியாக்கும் இறைவன் அளித்த இயற்கையான நீர் ஆகாரம் இளநீர் ஆகும்.உடல் சூட்டை குறைத்து உடலுக்கு தேவையான சத்துக்களையும் இளநீர் நமக்கு அளிக்கிறது.
நுங்கு மற்றும் பதநீர்
இளநீர் போல பதநீரும் , நுங்கும் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
குளிர் சாதனப் பெட்டியில் வைத்து நாம் அருந்தும் நீரை விட இத்தகைய நீர் ஆகாரங்கள் நமது உடலுக்கு குளிர்ச்சியோடு ஆரோக்கியத்தையும் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக