செவ்வாய், 29 மே, 2018

உங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா?... அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே?

உங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா?... அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே?

நெல்லிக்காயால் உங்கள் தோலுக்கும், முடிக்கும் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறியாமலிருந்தால், நீங்கள் வேறு உலகத்தில் வாழ்கிறீர்கள் என்றே அர்த்தம் கொள்ள முடியும். ஆனால் நாங்கள் உங்களுக்கு அது உங்கள் தடிக்கும் நன்மை பயக்கும் எனச் சொல்லியிருந்தால்!. உங்களால் உதாசீனம் செய்ய முடியுமா? 
இணையத்தில் உள்ள அனைத்து தாடி ஃபேஷன் ட்ரெண்ட்களுக்கு மத்தியில், ஒரு ஆண்மகனாக குறைந்தது ஒரு சில முறைகளை முயற்சிப்பது உங்கள் பொறுப்பு. 'நோ ஷேவ் நவம்பர்' லிருந்து பியர்டு கிளிட்டர் வரை, நீங்கள் தாடி வைத்திருந்தால் மட்டுமே முயற்சிக்க எதுவாக இருக்கும். ஆம்லா( நெல்லி) எண்ணெய் தாடி நன்றாக வளர உதவுகிறது, எனவே நீங்கள் சில தாடி வளர்ப்பு முறைகளை எப்போதும் விரும்பியபடி தோற்றமளிக்க இதை முயற்சிக்கலாம். 
ஆம்லா ஆயில்
நெல்லிக்காய் எண்ணெய் காலங்காலமாக அனைத்துத் தலைமுறையினராலும் தாடி வளர்ச்சியை மேம்படுத்தும் எண்ணையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயானது தொல்லைதரும் பொடுகைத் தடுக்க உதவது மட்டுமல்ல, முடி வீழ்ச்சியைக் குறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையிலேயே வைட்டமின் சி மூலப்பொருள்களைக் கொண்டுள்ள ஆம்லா(நெல்லி) உங்கள் முடியை ஆரோக்கியமாக்கி பிரகாசிக்கச் செய்கிறது. ஆம்லா எண்ணெய் உங்கள் தாடிக்கு ஊட்டச்சத்து வழங்கி அன்றாடம் அதை நீங்கள் எளிதாக ஹாண்டல் செய்ய உதவுகிறது.
எப்படி செய்வது?:
வீட்டில் ஆம்லா எண்ணெய் தயாரிப்பது மிகவும் எளிதான செயல். அட நிஜந்தாங்க !!, நீங்கள் உங்கள் பேவரிட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிஸ் பண்ணாமல் ஒரு கண்ணில் பார்த்துக்கொண்டே மறு கண்ணில் கூட இதை எளிதாகச் செய்ய முடியும் ..., ஆனால் அப்படி பண்ணாதீங்க!!! . நீங்கள் மிகக்குறுகிய நேரத்தில் செய்ய முடிந்த ஒரு மிக எளிய செய்முறையை இங்கே
தேவையான பொருட்கள்:
• ஆம்லா தூள் 2 தேக்கரண்டி
• 2 தேக்கரண்டி தேங்காய் / ஆலிவ் எண்ணெய்
செய்முறை:
1. தேங்காய் எண்ணெயை ஒரு வறுக்கும் பாத்திரத்தில் ஊற்றி , அதில் ஆம்லா தூளைச் சேர்க்கவும். 2. இந்தக் கலவை பழுப்பு நிறத்தில் மாறும் வரை சூடுபடுத்துங்கள். சிறிது நேரம் ஆறவைத்த பிறகு, அதை ஒரு சல்லடை மூலம் வடிகட்டி சுத்தமான எண்ணையைச் சேகரிக்கவும். அதை வாரம் 4 முறை உங்கள் தாடியின் மீது 20 நிமிடங்கள் மென்மையாகத் தடவி, உங்கள் தாடியை முழுவதுமாக மசாஜ் செய்யவும்.பிறகு , உங்களுடைய அந்த மென்மையான மற்றும் அடர்த்திமிக்க தாடிக்கு பெண்கள் மயங்குவதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம்.
தாடி முடி கொட்டுகிறதா?
கவலைப்படாதீர்கள் , கீழுள்ள முறையில் உங்கள் தாடி உடனடியாக அதன் இயற்கை சக்தியை மீண்டும் பெறும். இந்த ஆம்லா மற்றும் ஷிக்ககாய் தாடி பேக், உங்கள் விலைமதிப்பற்ற தாடியின் முடி இழப்பைத் தடுக்க உதவுகிறது.
ஆம்லா மற்றும் சீயக்காய் தாடி பேக்:
தேவையான பொருட்கள்:
• 2 தேக்கரண்டி நெல்லிக்காய் (ஆம்லா) தூள்
• சீயக்காய் 2 தேக்கரண்டி
• ரோஸ் வாட்டர் 4 தேக்கரண்டி
செய்முறை :
1. ஆம்லா தூள் மற்றும் சீயக்காய் எடுத்து அதை ரோஜா நீருடன் சேர்க்கவும்.
2. இம்மூன்றையும் பேஸ்ட்டாகச் செய்து அதை உங்கள் தாடியில் தடவுங்கள்.
3. ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிட்டு, குளிர்ந்த நீரில் தாடியைக் கழுவவும். ஷாம்பூ பயன்படுத்த தேவையில்லை, ஏனெனில் ஷிககாய் இயற்கையான சுத்திகரிப்பாளராக வேலை செய்கிறது.
4. இதை வாரத்திற்கு ஒருமுறை செய்யவும்.
ஜில்லட் ஃப்யூஷன் புரோஜிலிட் ஸ்டைலெர் 3-இன் 1- ஐ, பியர்ட் டிரிம்மருடன் பயன்படுத்தி உங்கள் தாடியை சிறிது காலத்திற்கு ஒரு முறை ட்ரிம் செய்யுங்கள். இம்முறை உங்கள் தாடியை வீட்டிலிருந்தபடியே எளிதாக ஒழுங்கமைக்க, ஷேவ் செய்ய மற்றும் செதுக்க உதவுகிறது. இப்போது இந்த ஆம்லா எண்ணெய் உங்கள் தாடியின் ஊட்டச்சத்தின் ரகசியம் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.
உற்சாகத்துடன், உங்கள் தாடியை பல நிறங்களில் அழகாக வண்ணம் பூசி மகிழுங்கள்! சரும பாதுகாப்பு, முடி பராமரிப்பு, எடை இழப்பு மற்றும் பல மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியது இந்த அதியமானின் அதிசய நெல்லிக்காய் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆம்லாவின் 7 அத்தியாவசிய நன்மைகளை உங்கள் முடி சுகாதாரத்திற்காக பாருங்கள்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக