வெயிலின் தாக்கத்தை குளிர்ச்சியாக மாற்றும் நன்னாரி சர்பத் !
வெயிலின் தாக்கத்தை குளிர்ச்சியாக மாற்றும் நன்னாரி சர்பத் !
இந்த வருடம் வெயிலின் துவக்கமே ஆக்ரோஷமாக துவங்கியுள்ளது. இந்த வெயில் காலத்தை பொதுவாக ஏ.சி, ஐஸ் போன்ற வசதிகளுடன் கடக்க பழகிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இவை வெளியில் குளிர்ச்சியாக இருந்தாலும் உடலின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். இதனால் நாளடைவில் பலவிதமான நோய்கள் வந்து சேரும். குறிப்பாக சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் ஏற்பட கூடும்.
ஆனால், நம் முன்னோர்கள் வெயில் காலத்தில் உடலின் சோர்வைக் குறித்து பித்தத்தால் வரும் நோய்களை தவிர்க்க பல சிறப்பான வழிமுறைகளைக் கையாண்டு வந்தார்கள். அவற்றுள் முக்கியமானது நன்னாரி வேர் மணப்பாகு. நன்னாரி வேர், அதீத மருத்துவ குணங்கள் வாய்ந்தது.
கூடவே, உடலினை இயற்கையான முறையில் குளிர்வித்து, நல்ல வெயிலிலும் குளு குளு வென்று உடலினை வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது. இரண்டு நாட்கள் அருந்தினாலே உடலின் சூடு குறைவதை நன்கு உணர முடியும்.
இதனை அருந்தினால் கண் எரிச்சல் குறையும், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருந்து மாறும், சூட்டினால் ஏற்படும் வயிறு பிரட்டல் குறையும். இப்படி வெயில் தாக்கத்தை உடல் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உடலினை உள்ளிருந்து தயார் செய்து விடும். முக்கியமாக, பகலில் வெளியில் செல்லும்பொழுது அருந்திச் செல்வது நல்லது.
இதில் இன்றைய சிக்கல் என்னவெனில் நன்னாரி சர்பத் வெறும் சர்க்கரை மற்றும் எசென்ஸை கொண்டு தயார் செய்யப்படுகிறது. எனவே, ஒரிஜினல் நன்னாரி வேரினைக் கொண்டு செய்த நன்னாரி சர்பத்தை கண்டுபிடிப்பது சிரமம்.
ஒரு எளிய வழி என்னவெனில் எசென்ஸினால் செய்யப்பட்ட நன்னாரி சர்பத்தினை வெதுவெதுப்பான பாலினில் கலந்தால் பால் திரிந்து விடும். ஆனால், ஒரிஜினல் வேரினால் செய்த நன்னாரி சர்பத்தினை பாலினில் இட்டால் பால் திரியாது.
இத்தகைய ஒரிஜினல் நன்னாரி சிரப் இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் கிடைக்கிறது. இதனை வாங்கி சிறிது எலுமிச்சை பிழிந்து, சர்க்கரை அல்லது கருப்பட்டி இட்டு குடித்தால் அதீத குளிர்ச்சி தரும்.
வெயில் காலத்தில் காலையும், மாலையும் அல்லது வெளியில் செல்வதற்கு முன் கட்டாயம் பருகி வந்தால் வெயிலின் உஷ்ணத்தால் ஏற்படும் கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தையும் தவிர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக