செவ்வாய், 29 மே, 2018

இது தெரியாமல் போச்சே…! துளசி சாறில் தேன் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

இது தெரியாமல் போச்சே…! துளசி சாறில் தேன் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

இது தெரியாமல் போச்சே…! துளசிசாறில் தேன் கலந்து குடித்தால்இவ்வளவு நன்மைகளா?
துளசி சாறில் தேன் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது தெரியாமல் போச்சு என்று பலரும் வருத்தப்படுவது உண்டு.
சாறில் தேன் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது தெரியாமல் போச்சு என்று பலரும் வருத்தப்படுவது உண்டு. 
துளசிக்கு ஈடு இணை எந்த மருந்தும் இல்லை என்பது பலரும் அறிந்த ஒன்று. சளி, இருமல் போன்றவற்றிற்கு துளசி நல்ல இயற்கை மருந்தாக பயன்படுகிறது. குழந்தைகளுக்கு இதனை மூன்று வேளை கொடுத்தால், சளி, இருமல் போன்றவை கிட்டவே நெருங்காது. 
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக்கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் போன்ற பிற தொண்டை நோய்களை குணமாக்கும் சக்தி உண்டு. 
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்த சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால் போதும்.
 பதற்றம் ஏற்படுவதை தவிர்த்து நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 
உடல் எடை குறைய துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சூடாக்கி அதனுடன் தேன் கலந்து உணவுக்குப் பிறகு குடித்து வந்தால் உடல் எடை குறையும். 
சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும், அதனை கரைக்கவும் துளசி உதவுகிறது. மேலும், பால் கலந்த பானத்தில் உள்ள சிறந்த டையூரிடிக், யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது.
துளசி இலை போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால், வாய் துர்நாற்றத்தை போக்கும். 
ஒரு டம்பளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால், அதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் உடலிலுள்ள வெப்பத்தை குறைத்து காய்ச்சலை குணப்படுத்துகிறது.  துளசியிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக