செவ்வாய், 29 மே, 2018

தினசரி கூந்தல் பராமரிப்பில் நெல்லிக்காயின் நண்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்!!!

தினசரி கூந்தல் பராமரிப்பில் நெல்லிக்காயின் நண்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்!!!

நெல்லிக்காய்
அந்த காலத்தில் பெண்கள் இயற்கையான மூலப்பொருட்கள் பயன்படுத்தி அவர்களின் சரும அழகு மற்றும் கூந்தல் அழகைப் பராமரித்தனர். அவர்கள் பயன்படுத்திய கூந்தல் பராமரிப்புக்கான ஒரு முக்கிய பொருள் ஆம்லா அன்று அறியப்படும் நெல்லிக்காய்.
தலைமுடியை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு அற்புதமான மூலிகை நெல்லிக்காய். உச்சந்தலைக்கும் தலைமுடிக்கும் பல நன்மைகளை அது தருகிறது. நெல்லிக்காயின் பிறப்பிடம் இந்தியா. நெல்லிக்காயை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். இது வைட்டமின் சி சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. டன்னின் மிகவும் அதிகமாக உள்ளது. அண்டி ஆக்சிடென்ட் , ப்லேவனைடு, கேம்ப்பிரோல் , கல்லிக் அமிலம் போன்றவை நெல்லிக்காயில் அதிகமாக உள்ளது. இவை கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
கூந்தல் பராமரிப்பு
 நெல்லிக்காயை வெளிப்புறமாக தடவுவதுடன் சேர்த்து உங்கள் தினசரி உணவிலும் இதனை எடுத்துக் கொள்வதால் நெல்லிக்காயின் மொத்த நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும். நெல்லிக்காயை வெளிப்புறமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஆம்லா ஆயில்
தினசரி நெல்லிக்காய் எண்ணெய்யை தலைமுடியில் தடவுவதால், முடியின் வேர்க்கால்கள் வலிமையடைகிறது. முடி உடைதல், நுனி முடி பிளவு போன்றவை தடுக்கப்படுகின்றன. நெல்லிக்காயில் இருக்கும் பல்லூட்டச்சத்துகள், வைட்டமின் மற்றும் மினரல்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இளநரை
நெல்லிக்காயில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை வலிமைபடுத்தி, தலைமுடிக்கு ஒளிர்வைத் தருகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, இளநரையை தடுக்கிறது.
பொடுகு
 நெல்லிக்காய் ஒரு சிறந்த கண்டிஷ்னராக செயல்படுகிறது. மற்றும் பொடுகு தொல்லைக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. மேலும் கூந்தலின் அடர்த்தியை அதிகமாக்குகிறது.
ஹேர்கலரிங்
நெல்லிக்காய் நிறமிழப்பை எதிர்த்து போராடுகிறது. இதனால் தான், பல ஹேர் கலரிங் சாதனங்களில் நெல்லிக்காய் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. முடியை நீளமாக, பளபளப்பாக மற்றும் மிருதுவாக மாற்றுகிறது.
ஆயில் மசாஜ்
வறண்ட மற்றும் அரிப்பு அதிகம் உள்ள தலைமுடிக்கு நெல்லிக்காய் எண்ணெய் மூலம் மசாஜ் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். சோர்வான மற்றும் வறண்ட தலைமுடிக்கு நெல்லிக்காய் ஈரப்பதத்தைத் தருகிறது. தலையில் உள்ள இறந்த அணுக்களை அகற்றி, முடி சிக்காகுவது மற்றும் சுருளுவது தடுக்கப்படுகிறது.
ஆம்லா பவுடர்
நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் தூள் ஆகியவற்றைப்போல் நெல்லிக்காய் சாறும் தலைமுடி பாதுகாப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது, முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக