தன்பாலின உறவு கொள்ளும் பெண்களுக்கு சர்க்கரை நோய் தாக்க அதிக வாய்ப்பு
தன்பாலின உறவு கொள்ளும் பெண்களுக்கும் இருபாலின உறவு கொள்ளும் பெண்களுக்கும் மற்ற பெண்களைவிட சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் சான் டியாகோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் 94,250 பெண்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் 24 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆய்வில் பங்கேற்ற 94,250 பெண்களில் 1,267 பேர் தாங்கள் தன்பாலின உறவாளர்கள் என்றும், 92,983 பேர் தாங்கள் வேற்றுபாலின உறவாளர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்தினர்.
ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் தன்பாலின உறவு கொள்ளும் பெண்களுக்கும் இருபாலின உறவு கொள்ளும் பெண்களுக்கு டைப் 2 வகை சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் 22% அதிகமாக இருந்தது.
ஸ்ட்ரெஸ்தான் முக்கியக் காரணம்..
இப்படியாக, தன்பாலின உறவு, இருபாலின உறவு கொள்ளும் பெண்களுக்கு டைப் 2 வகை சர்க்கரை நோய் அதிகம் ஏற்பட மன அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது, அடக்குமுறை, வன்முறை, துன்புறுத்தலுக்கு ஆளாவதால் மன அழுத்தம் காரணமாக இத்தகைய பெண்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் எளிதில் தாக்கிவிடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மன அழுத்தம் தவிர உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு குறைபாடு ஆகியனவும் இந்த நோய் தாக்கத்துக்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக