முந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா?...
எந்த பலகாரங்கள், பாயாசம் மற்றும் இனிப்பு வகைகள் என எடுத்தாலும் அதில் முந்திரி பருப்பு இல்லாமல் நாம் அலங்கரிப்பது கிடையாது. காரணம் அந்த அளவுக்கு இதன் சுவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். முந்திரி பருப்பில் உள்ள ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு இதில் எண்ணற்ற விட்டமின்களும் தாதுக்களும் அடங்கியுள்ளன.
இப்படி நிறைய நன்மைகளை தந்தாலும் இது அதிக கலோரி கொண்டுள்ளதால் உடல் எடையை அதிகரிக்குமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது. சரி வாங்க அதைப் பற்றிய ஒரு அலசல் தான் இந்த கட்டுரையின் ஸ்பெஷலே.
இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது. இதில் அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் களைப்படையாமல் உற்சாகமாக இருப்பீர்கள். முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில் அதிகளவில் ட்ரைப்டோபோஃன் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பை தூண்டி மனநிலையை அமைதியாக்குகிறது. மேலும் ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டா பாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது. இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது என்று 2014 ல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனால் வெளியிடப்பட்ட ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
எனவே இதை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம். இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
நீங்கள் உங்கள் உணவில் முந்திரி பருப்பை சேர்க்க நினைத்தால் ஒரு கைப்பிடியளவு பச்சையாக முந்திரி பருப்பை எடுக்கலாம். அப்படி இல்லையென்றால் சைடிஸாக உணவில் சேர்த்தல், பச்சை பீன்ஸ், சாலட்ஸ், பாயாசம் போன்றவற்றில் சேர்த்து கூட முந்திரி பருப்பின் முழு நன்மைகளையும் பெறலாம்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பெற கீழேயுள்ள மஞ்சள் நிறFOLLOW பட்டனை அழுத்துங்கள். நன்றி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக