இந்த கோடை காலத்தில் பரவும் அம்மை நோயை வராமல் தடுக்கும் முறை!. வந்தால் எவ்வாறு அணுகவேண்டும்?
இந்த கோடை காலத்தில் பரவும் அம்மை நோயை கட்டுப்படுத்தும் மருத்துவம்.
இந்த கோடை காலத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது அம்மை நோய். அம்மை நோய் தெய்வ குத்தத்தால் வருவது என்ற நம்பிக்கை இன்னமும் நம் சமூகத்தில் இருக்கிறது. அம்மை வந்தால் குளிக்கக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என எண்ணற்ற தவறான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
உண்மையில் இது தெய்வ குத்தத்தால் ஏற்படுவது இல்லை. வைரஸ் கிருமியின் வருகையால் ஏற்படுகிறது.
ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பெரியம்மை நோயால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். பெரியம்மைக்குத் தடுப்பூசி வந்த பிறகு அது ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்த வைரஸ் கிருமியை மிகவும் பாதுகாப்பாக ஒரு சில ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக வைத்துள்ளனர்.
தற்போது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவது சிக்கன்பாக்ஸ் (Chickenpox) எனப்படும் சின்னம்மை. இது ஒரு தொற்றுநோய். யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அம்மை நோய் வந்தால் சுட்டுக்கொல்லும் வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த அம்மை நோய் எளிதில் பரவக்கூடிய நோய் ஒன்று.
இந்த நோயின் அறிகுறிகள்:
தீவிரமான காய்ச்சல் இருக்கும். இது, தொண்டை, நுரையீரல் மற்றும் தோலில் புண்களை ஏற்படுத்தும். வழக்கமாக முதுகு, வயிறு போன்ற பகுதிகளில் சின்னம்மை புண்கள் ஏற்படும்.
தீவிரமான காய்ச்சல் இருக்கும். இது, தொண்டை, நுரையீரல் மற்றும் தோலில் புண்களை ஏற்படுத்தும். வழக்கமாக முதுகு, வயிறு போன்ற பகுதிகளில் சின்னம்மை புண்கள் ஏற்படும்.
அம்மை நோய் வந்தால் தனி அறையில் இருப்பது நல்லது. அம்மை நோய் வந்தால் உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், குளிர்ச்சியான அறையில் இருப்பது சிறந்தது. வேப்பிலை ஒரு கிருமிநாசினி என்பதால், அம்மை நோய் புண்களுக்கு மிகவும் நல்லது. சுத்தமான வேப்பிலை பயன்படுத்துவது நல்லது.
கோடை காலத்தில் கொழுந்து வேப்பிலைய வாரம் ஒரு முறை சாப்பிட்டால் அம்மை நோய் வராமல் தடுக்க முடியும். அதில் அதிக எதிர்ப்பு சக்தி உள்ளது. அம்மை நோய் ஏற்பட்டால் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம். வீட்டில் சமைத்த சுத்தமான உணவை சாப்பிடுவது நல்லது. உண்ணும் உணவில் காரம் மற்றும் எண்ணெய் குறைவாக பயன்படுத்தி சாப்பிடலாம். பழச்சாறுகள், உப்புக்கரைசல்கள், இளநீர் போன்ற நீர் ஆகாரங்களையும் பப்பாளி, கேரட் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக