உங்களுக்கு இப்படி கனவு வருதா – கனவுபலன் 8
கனவுகளும் அதன் பலன்களும்
இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும்.
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும்இ அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்
திருவிழாவை சுற்றி பார்ப்பது போல கனவு கண்டால்,
வீடு-வாகனம், பொருட்கள் வாங்கும் யோகம் வரும். அதனால் கடனும்வாங்குவீர்கள். இருந்தாலும் குடும்பத்திலும், உங்கள் மனதிலும் சந்தோஷம் இருக்கும். புதிய சுமை இருந்தாலும் அதை சுகமான சுமையாகவே கருதுவீர்கள்.
திருவிழாவில் யாரையாவது தேடுவது போல கனவு கண்டால்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக