ஞாயிறு, 13 மே, 2018

கோடையில் உடல் வறட்சியடையாமல் தடுப்பது எப்படி?

கோடையில் உடல் வறட்சியடையாமல் தடுப்பது எப்படி?

கோடைகாலம் ஆரமித்து சிறிது நாள்களே ஆனா நிலையில் வெயில் சுடேரித்து கொண்டிருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பலரும் அவதிப்படுகின்றனர். பல பேர் வீடுகளில் ஏசி பயன்படுத்துறாங்க ஆனால் எலெக்ட்டிக் பில் பார்த்த உடனே பிபி, சுகர் எல்லாம் வந்துரும்.
உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் அது பல பிரெச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. அதோடு இதனால் சருமத்தில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
நம் உடல் 70 % தண்ணீரால் ஆனது. வெயில் காலத்தில் தண்ணீர் அளவு அதிக அளவில் குறையும் என்னவே இதை சமாளிக்க நாம் நிறைய நீர் அருந்த வேண்டும்.
இக்கட்டுரையில் கோடையில் உடல் வறட்சி அடையாமல் இருக்க செய்ய வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜூஸ் குடியுங்கள்
வெறும் தண்ணீர் மட்டும் அருந்த வந்தால் சற்று அலுத்து போகும் . என்னவே ஜூஸ் மாதிரி செய்து அருந்தி வந்தால் நன்றாக இருக்கும். அத்துடன் வைட்டமின்கல், மினெரல்கல்  கிடைக்கும் . 
குறிப்பு : ஜூஸ் அருந்தும் பொது அதில் சர்க்கரை சேர்க்காமல் அதுக்கு பதிலாக தேன் சேர்த்து வருதல் நன்று.
இளநீர் குடியுங்கள்
நீர்ச்சத்தை அதிகரிக்க முக்கியமான பொருள் இளநீர். வெளியே செல்லும் போது எவ்வளவு தான் நீரை கொண்டு செல்ல முடியும். ஆனால் வெளியிடங்களுக்கு செல்லும் போது, தெருவோரங்களில் இளநீர் விற்கப்பட்டால், அதை அச்சமின்றி வாங்கிப் பருகலாம். இளநீரில் எவ்வித கலப்படமும் இல்லை. மேலும் இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளதால், இது உடலை புத்துணர்ச்சி அடையச் செய்து, உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

சாலட் சாப்பிடுங்கள்
காய்கறிகள் மற்றொரு அற்புதமான நீர்ச்சத்தைப் பெற உதவும் உணவுப் பொருட்களாகும். ஆகவே வெள்ளரிக்காய், தக்காளி, கீரைகளைக் கொண்டு சாலட் தயாரித்து, அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி, கோடைக்காலத்தில் சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் வறட்சியடையாமலும் இருக்கும்.

சூப் குடியுங்கள்

ஒருவரது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் உணவுகளுள் ஒன்று சூப். கோடைக்காலத்தில் காய்கறிகளால் ஆன சூப்பை குடித்தால், அதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் நன்கு ஆரோக்கியமாகவும், வறட்சியடையாமலும் இருக்கும். மேலும் சூப் கோடைக்காலத்தில் வாய்க்கு ருசியானதாகவும் இருக்கும்.

மோர் குடியுங்கள்
மிகவும் சுவையான மற்றும் உடல் சூட்டைத் தணிக்கும் மறும் உடல் வறட்சியைத் தடுக்கும் அற்புத பானம் தான் மோர். மேலும் மோரில் செரிமான மண்டலத்தில் உணவை செரிப்பதற்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. அதிலும் மோரில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றைப் போட்டுக் குடித்தால், அந்த மோர் இன்னும் சுவையாக இருக்கும்.

தண்ணீர்
 
நீங்கள் உங்கள் டியட்டில் எவ்வளவு தான் திரவங்களை சேர்த்தாலும், தண்ணீரை தவறாமல் சீரான இடைவெளியில் குடிக்கும் பழக்கத்தை கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் உடலுக்கு கோடையில் தேவையான அத்தியாவசியமான ஒன்று தண்ணீர். எனவே, அதை மட்டும் குடிக்க தவற வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக