ஞாயிறு, 13 மே, 2018

எலுமிச்சை பழம் கொடுக்கும் பலன்கள் பற்றி தெரியுமா?

எலுமிச்சை பழம் கொடுக்கும் பலன்கள் பற்றி தெரியுமா?

இயற்கையாகவே சிட்ரஸ் என்ற ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழம் எலுமிச்சை.இதனை அதிகமான உணவுப் பொருள்களில் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.நமது சமையலறைகளில் எலுமிச்சை எப்போதும் ஏன் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க...

பண்டைய எகிப்திய மக்கள் பல வகையான நச்சுக்கள் மற்றும் கிருமிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எலுமிச்சை மிகவும் அவசியம் என நம்பினார்கள்.எலுமிச்சையில் அதிகளவில் வைட்டமின் சி உள்ளது.இதன் விலை குறைவானதாக இருந்தாலும் ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளது.நீங்கள் ஒரு கப் அளவுள்ள எலுமிச்சை சாற்றை எடுத்துக் கொண்டால் அதில் 55 கி.வைட்டமின் சி சத்து உள்ளது.அதுமட்டுமில்லாமல் பொட்டாசியம், கொஞ்சம் கால்சியம், இரும்புச்சத்து ஆகிய சத்துக்களும் உள்ளன.மும்பை நகரில் நியூட்ரீஷியனிஸ்ட் ஆக செயல் பட்டு வரும் ஷிபானி தல்படே இதன் பலன்கள் பற்றி கூறியதாவது "இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்தானது ரத்தக் குழாய்களின் சுவர்களை வலுவூட்டுவதற்கும் மேலும் இதிலுள்ள இரும்பு சத்து ரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும்.பெண்கள் மற்றும் குழந்தைகள் எலுமிச்சையை உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
எலுமிச்சை பழத்தின் பயன்கள் :

எலுமிச்சை பழத்தில் 5% அளவு சிட்ரிக் அமிலம் உள்ளது.இதனை பயன்படுத்துவதால் நோய்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.
சூடு நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் செரிமான கோளாறு சரியாகும்.மற்றும் சாதாரணமாக ஏற்படும் சளியை குணமாக்கும்.
ஒரு ஸ்பூன் அளவுள்ள எலுமிச்சை பழத்தின் ஜூஸை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தேனீர் அல்லது சூடு தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் வலி பிரச்சனைகள் தீரும்.
எலுமிச்சை உமிழ் நீரை அதிகமாக சுரக்க செய்யும் .இதனால் வாய் வறண்டு போகும் பிரச்சனை தீரும்.எலுமிச்சை பழத்தை நுகர்வதால் தலை சுற்றல் மற்றும் மயக்கம் சரியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக