நெல்லிக்கனி சாற்றை முகத்தில் தேய்த்தால் இவ்வளவு நன்மைகளா?
விலை மலிவாகவும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் உள்ளே ஒரு சில காய்களில் நெல்லிக்கனியும் ஒன்று.ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைக்கும் நெல்லிக்கனி சந்தைகளிலும் எளிதாக கிடைக்கும் ஒன்று.




நெல்லி கனியை ஜூஸ் ஆகவோ அல்லது ஊறுகாயாகவோ தான் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். ஆனால் இதன் சாற்றை சருமத்தை பொலிவு பெறவும் பயன்படுத்தலாம். வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்திருக்கும் கனி நெல்லி இது ஆரஞ்சில் இருக்கும் அளவை விட அதிகம். இது மட்டுமில்லாமல் இரும்பு, கால்சியம் உட்பட பல சத்துகள் நெல்லிக்கனியில் அதிகம்.
"முகத்தில் இருக்கும் கருப்பு நிற பருக்களை அடியோடு நீக்கும் தன்மை நெல்லிக்கனியில் உள்ளது". கருவளையம் சருமத்தின் மங்கிய தன்மை ஆகியவற்றை நீக்கவும் நெல்லிக்கனி பயன்படுகிறது. நெல்லிக்கனி சாற்றை முகத்தில் தடவி அரை மணி நேரத்திற்கு பின் கழுவினால் உடல் தோற்றத்தை சில நாட்களில் உணரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக