ஞாயிறு, 13 மே, 2018

ஆச்சரியமான உண்மை.,குழந்தை பிறந்தால் ஆபத்து., 400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத அதிசய கிராமம் ..

ஆச்சரியமான உண்மை.,குழந்தை பிறந்தால் ஆபத்து., 400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத அதிசய கிராமம் ..



மத்தியபிரதேச மாநிலத்தின் ஒரு விசித்திர கிராமத்தில், சுமார் 400 ஆண்டுகளாக கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்காத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ராஜ்கர்க் மாவட்டத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமம் உள்ளது. 
இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரசவமே நடப்பதில்லை என்றும்,அவசர காலங்களில் இந்த கிராம எல்லைக்கு வெளியே ஒரு மண்டபத்தில் பிரசவம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அங்கு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும் அதை மீறி அந்த ஊரில் பிரசவம் பார்த்தால் இரு உயிர்களுக்கும் ஆபத்து என்றும் என்கின்றனர் அந்த கிராம மக்கள்.
இதை குறித்து கிராமத்தினர் கூறுகையில், 16ஆம் நூற்றாண்டில் எங்கள் கிராமத்தில் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடைப்பெற்றுள்ளது. 
அப்போது கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணால் அதற்கு இடையூறு ஏற்பட்டது. இதன்காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.  
இதனால் கோபமடைந்த தெய்வம் கிராமத்திற்கு சாபம் விட்டதாகவும்,அதன் பிறகு கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் இறந்து பிறக்கும் அல்லது  ஏதாவது குறைபாடுகளுடன் பிறக்கும்  என்று கூறுகின்றனர்.
மேலும் அதனால் இங்கு பிரசவம் பார்ப்பதில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
கடவுள் சாபம் குறித்து எழுத்து பூர்வமாக எந்த குறிப்புகளும் இல்லை. எனினும் எங்கள் மூதாதையர்கள் வாய்மொழியாக சொன்னதுகேற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று அந்த ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக