செவ்வாய், 29 மே, 2018

தூக்கமின்மையை சரி செய்யும் நிரந்தர தீர்வு முறைகள்!

தூக்கமின்மையை சரி செய்யும் நிரந்தர தீர்வு முறைகள்!

மனம் அல்லது மூளை விழித்தே இருக்கும் ஓர் அவஸ்தையான தருணம் தான் தூக்கமின்மை. கண்ணை மூடி கொண்டே நடப்பவையெல்லாம் தெரிந்து கொண்டே படுத்து புரண்டு கொண்டிருப்பார்கள். இது மட்டுமல்லாமல் கண்ட கண்ட எண்ணங்கள் மனதை போட்டு வாட்டும். பெரும்பாலான நோய்கள் தூக்கமின்மையால் வளர்கிறது.மன அழுத்ததிலிருந்து விடுபட சரியான மருத்துவத்தை நாடி பயன்பெற்றால் தூக்கமின்மையை குணப்படுத்தி விடலாம். அதற்கு அக்குபஞ்சர் அரோமா பாத ரிப்லக்ஸாலஜி போன்ற முறைகள் அற்புதமான உடனடி, பக்கவிளைவுகள் இல்லாத தீர்வுகளை தரும்.
தூக்கம் வரவில்லை என்பதற்கு ஆத்திரமோ, கோபமோ அடைய கூடாது. முடிந்தளவு மூச்சை இழுத்து விட வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். முக்கியமாக அரோமா பாத ரிப்லக்ஸாலஜி மற்றும் தூக்கத்திற்கான சிறப்பு அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டி சிகிச்சை மேற்கொண்டால் மிக எளிதாக தூக்கமின்மையினை குணப்படுத்தலாம். பிடித்த இசையை இரவில் கேட்கலாம். மனதிலுள்ள நல்ல விஷயங்களை அசைப்போட்டு எதிர்மறை எண்ணங்களை தூர போடவேண்டும். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கலந்து மனம் விட்டு சிரித்து பேசுவதினாலும் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பதாலும் மனம் லேசாகி நன்றாக தூக்கம் வர வாய்ப்புள்ளது.
படுத்தவுடன் தூங்கி விட்டால் உண்மையில் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சுமார் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியம். அவ்வாறு தூங்கி எழும் போது மனசும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உள் மூச்சு வெளி மூச்சு ஆகியன நடக்கும் போது நமது மூளை அமைதியாக இருக்கும். மூக்கின் வழியே மூச்சை 4 நிமிடங்கள் உள் இழுத்து 7 அல்லது 8 நொடிகள் மூச்சை உள் நிறுத்தி பின்னர் வாய் வழியே 8 நொடிகள் மூச்சை விடவேண்டும். இதனை செய்யும் போது, ஆரம்பத்தில் கொஞ்சம் நேரமானாலும், தொடர்ந்து செய்யும் நல்ல பயிற்சியாக மாறி மந்திரம் போட்டது போல் தூக்கம் வந்து விடும். இந்த தகவலை கடலூர் மஞ்சக்குப்பம் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் உஷாரவி தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக