வியாழன், 17 மே, 2018

உங்க தொப்பை வேகமா குறையணுமா? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணுங்க!

உங்க தொப்பை வேகமா குறையணுமா? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணுங்க!

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றுதான் வாழைப்பழம். அணைத்து இடங்களிலும் சுலபமாக கிடைக்க கூடிய ஓன்று.
வாழைப்பழத்தில் ஏராளமான அளவில் பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசியமானது தசைகளை வலிமைப்படுத்த மிகவும் அவசியமான ஓன்று மற்றும் இது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவி செய்கிறது.
ஒரு சாதாரண வாழைப்பழத்தில் 105 -120 கலோரிகளும், ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் பி6-இல் 20 சதவீதமும், வைட்டமின் சி-இல் 18 சதவீதமும், பொட்டாசியத்தில் 13 சதவீதமும், நார்ச்சத்தில் 12 சதவீதமும், மாங்கனீசில் 9 சதவீதமும் அடங்கியுள்ளது. 
உங்கள் தொப்பையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புதமான வாழைப்பழ பானம் இதோ...
தேவையான பொருட்கள்: 
வாழைப்பழம் – 1 
ஆரஞ்சு – 1 
தயிர் – 1/2 டம்ளர் 
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
இஞ்சி பவுடர் – 1/2 டேபிள் ஸ்பூன் 
ஆளி விதை – 2 டேபிள் ஸ்பூன் 
செய்முறை: 
இதன் செய்முறை மிகவும் எளிது. அதற்கு மிக்ஸியில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு அரைத்தால் பானம் தயார்.
குடிக்கும் முறை: 
இந்த பானத்தை தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் கிடைத்துவிடும், நாள் முழுவதும் நல்ல மனநிலையிலும், சுறுசுறுப்புடனும் உங்களால் செயல்பட முடியும். 
இந்த வாழைப்பழ பானத்தின் இதர நன்மைகள்:
#1 வாழைப்பழம் சிறுநீரக புற்றுநோய் மற்றும் கண்களில் மாகுலர் திசுக்கள் சிதைவடைவதைத் தடுத்து நிறுத்தும்.
#2 வாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ ராடிக்கல்கள் மற்றும் நாள்பட்ட நோய்களில் இருந்து உங்களை பாதுக்காக்கும்.
#3 வாழைப்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க மற்றும் காலைச் சோர்வைக் குறைக்க உதவி செய்கிறது.
#4 வாழைப்பழம் ஒரு நேச்சுரல் ஆன்டாசிட். இதை சாப்பிட்டால் அதிகப்படியான அமில உற்பத்தியால் ஏற்படும் எரிச்சலில் இருந்து உங்களை விடுவிக்கும்.
#5 வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன், மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்க உதவும்.
#6 வாழைப்பழத்தில் உள்ள சைட்டோல்சின் என்னும் உட்பொருள், இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்
#7 வாழைப்பழம் வீக்கம், டைப்-2 சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். இவை அனைத்திற்கும் காரணம் அதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் பி6 தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக