நிபா வைரஸ் வவ்வால் மூலம் பரவவில்லை
முதலில் உயிரிழந்த இருவரின் வீட்டு கிணற்றில் இருந்த வவ்வால்கள் மூலமே வைரஸ் பரவியது என்று கூறப்பட்டது.
இதையடுத்து அங்கு ஆய்வு நடத்தி வவ்வால், பன்றி, எருது , ஆடுகள் போன்றவைகளிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு மகாராஷ்டிராவின் புனே, மத்தியப் பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன.
அவ்வாறு பரிசோதனை செய்து பார்த்ததில், எந்த மாதிரிகளிலும் நிபா வைரஸ் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வேறு எந்த வகையில் நிபா வைரஸ் பரவி இருக்கும் என்பது பற்றி மருத்துவர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக