செவ்வாய், 29 மே, 2018

நிபா வைரஸ் எங்கே? எப்படி? தோன்றியது: முழு வரலாறு

நிபா வைரஸ் எங்கே? எப்படி? தோன்றியது: முழு வரலாறு

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புர மாவட்டங்களில் 10 பேர் தாக்கி உயிரிழந்துள்ளனர்.நிபா வைரஸ் பூதாகரமாக மாறிவரும் நிலையில் இந்த வைரஸ் எங்கு எப்படி கண்டறியப்பட்டது என்பது பற்றி தெரிந்துகொள்வோம் 

நிபா வைரஸ் வரலாறு 

1998 ஆம் ஆண்டு மலேஷியாவை தாக்கிய நிபா வைரஸ், பெட்ரோபோடிடேவகையை சேர்ந்த வெளவால்கள் மூலம் இந்த நோய் விலங்களுக்கு பரவுகிறது. 

1998 ஆம் ஆண்டு கம்பங் சுங்காய் நிப்பா( Kampung Sungai Nipah) என்ற கிரமாத்தில் இந்த நோய் வெளவால்களால் பன்றிகளுக்கு பரவியது. இங்கிருந்த வெளவால்கள் அங்குள்ள ஒரு பழத்தை தின்று வெளியேற்றிய எச்சத்தை பன்றிகள் உட்கொண்டபோது நிபா வைரஸ் தாக்கியது.
இந்த வைரஸ் முதலில் நிப்பா கிராமத்தில் கண்டறியபட்டதால், இந்த கிராமத்தின் பெயரே இந்த வைரஸ்-சுக்கும் வைக்கப்பட்டது.அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு வங்காள தேசத்தில் இந்த வைரஸ் மனிதரகளை தாக்கியது. வெளால் சாப்பிட்ட பேரிச்சம்பழத்தை மனிதர்கள் உட்கொண்டதால் இந்த வைரஸ் மனிதர்களை மனிதர்களிடம் பரவியது பிறகு கண்டறியப்பட்டது. 

நிபா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கு
 
ம் 

கடுமையான காய்ச்சல், மற்றும் மூச்சு திணறல்ஏற்படும். மேலும் காய்ச்சல் வந்த பிறகு தலைவலி ஏற்படும். அதன்பிறகு காய்ச்சல் அதிகமாகி மூளை காய்ச்சலாக மாறும். ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கு சென்று மரணம் ஏற்படும். இந்த வைரஸ்-சுக்குஎந்த தடுப்பூசியும், மருந்தும் இல்லை . 
 


எனவே மக்கள் கடும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். காய்ச்சலை கட்டுக்குள் வைத்துகொள்ள முயல்வதே நோயாளிகளுக்கு மருத்துவர்களால் செய்ய
 
முடியும். 

நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 30%தான் உள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக