கீரையில் உள்ள சத்துக்கள்!!!! மற்றும் மருத்துவ பயன்கள்!...
- பொதுவாக கீரை வகைகளில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஆகியவை முக்கியமாக உள்ளது. இது, குறிப்பாக பார்வைக்கோளாறு, ரத்தசோகையை போக்குவதில் நல்ல பலனளிக்கிறது. முக்கியமான சில கீரைகளில் உள்ள சத்துக்களையும், அதன் பலன்களையும் அறிந்து கொள்வோம்.
வெந்தயக் கீரை :
- கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளது. இது பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும் தன்மையுடையது. (கீரைகளை நன்கு கழுவி பயன்படுத்தவும்)
புளிச்ச கீரை :
- இரும்புச் சத்து 2.28 மி.கி., வைட்டமின் ஏ 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். (கீரைகள் சமைத்த நீரை, கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தலாம்)
முட்டைகோஸ் :
- வைட்டமின் சி 124 மி.கி., வைட்டமின் ஏ, ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும். இது மூட்டுவலிகளை சரிபடுத்தும் தன்மையுடையது.
முருங்கைக் கீரை :
- வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். இதனை சரிசெய்ய முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
கறிவேப்பிலை :
- வைட்டமின் ஏ 75,000 மைக்ரோகிராம், கால்ஷியம் 830 மி.கி., போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.
புதினா கீரை :
- போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200 மி.கி., இரும்புச் சத்து 15.6 மி.கி., வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. புதினா ரத்த சோகையைப் போக்க வல்லது.
கொத்தமல்லி :
- கால்ஷியம் 184 மி.கி., இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8,918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது.
மணத் தக்காளி:
- இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன. வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும்.
மேலும்
இதனை பற்றிய உங்களது கருத்துக்ககளை கீழே தெரிவிக்கவும் மற்றும் இது உங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக