புதன், 9 மே, 2018

ஏதோ ருசிக்காக சேர்க்கப்படும் பொருள் இல்லை இது இதன் மகத்துவம் தெரிந்தால் ஆச்சர்யம் அடைவீர்கள்...

ஏதோ ருசிக்காக சேர்க்கப்படும் பொருள் இல்லை இது இதன் மகத்துவம் தெரிந்தால் ஆச்சர்யம் அடைவீர்கள்...


நாம் இந்த பக்கத்தில் பார்க்க போகும் வேர ஒன்னும் இல்லங்க நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் நமது சமையலறையில் உள்ள மிக முக்கிய பொருள் தான் மிளகு.ஆனால் நாம் இதனை கார சுவைக்கு பயன்படுத்தும் பொருளாகவே பார்க்கிறோம்.நம் முன்னோர்கள் மிளகின் பயங்களை அரிந்து அந்த காலத்தில் அனைத்து வகையான உணவுகளிலும் மிளகை பயன்படுத்தி கொண்டு வந்தனர்.மேலும் கூற போனால் இப்பொழுது நாம் கார சுவைக்கு பயன்படுத்தும் மிளகாய் எல்லாம் அந்த காலத்தில் நம் முன்னோர்களுக்கு என்னவென்றே தெரியாது.ஆங்கிலேயர்கள் வனிகத்திற்கு வந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த  மிளகை கண்டு,சிறிது எடுத்து அதனை ஆராய்ச்சி செய்ததில் அதன் மாபெரும் மருத்துவ குணங்களை கண்டு அதிர்ந்து போனார்கள் என்றே சொல்லலாம். பிறகுதான் இதை எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்று நமக்கு கரத்திற்க்காக மிளகாய் என்ற ஒன்றை அறிமுகம் செய்து விட்டு மிளகை அவர்கள் நாட்டிற்கு கடத்தி சென்றனர்.மேலும் மிழகுக்காக தான் படை எடுத்து நம்மை ஆட்சி செய்து நம் பழக்க வழக்கங்கங்களியும் மாற்றுவிட்டனர்.

அவர்கள் மிளகை   இவ்வாறு கடத்தி கொண்டு சென்றதுக்கு காரணங்களை  நாமும் தெறிந்து கொள்ளலாம் வாங்க.......
தலை பொடுகை அறவே ஒழிக்கும்:
கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலக்கவும். இந்தக் கலவையை தலையில் நன்றாக பரவலாகத் தடவவும்.
 அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவும். இப்போது ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது. மறுநாள் ஷாம்பூ போட்டு குளிக்கவும். 
எடை குறைய விரும்புவோர்:
நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கரு மிளகு அதன் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்
ஜீரண மண்டலத்தின் செயல்திறன்:
நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஐட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.

புற்றுநோய் செல்களை அழிக்கும்:
மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
 மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
 சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
 நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்
 
வாய்வு தொல்லையில் இருந்து விடுதலை:
சரியாக ஜீரணமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது. மிள்காய்ப்பொடிக்கு பதிலாக நாம் இனிமேல் மிளகுப்பொடியை பயன்படுத்தலாமே
நண்பர்களே இப்பொழுது புரிகிறதா இதன் மகத்துவம்.ஆனால் நான் கூறியது ஒரு சில பயங்களை மட்டுமே ஆனால் இன்னும் எண்ணற்ற மருத்துவ குணங்களை
தன்னிடத்துள் கொண்டுள்ள அபூர்வ பொக்கிஷம் தான் இந்த மிளகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக