உங்கள் நகம் இப்படி இருக்கா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு இந்த ஆபத்து வர வாய்ப்பு அதிகம்!
நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால் வாயு தொல்லை அதிகமாக இருபத்தற்கான அறிகுறிகளாம்.
விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால் உடல் நலம் குன்றி இருப்பதற்கான அடையாளமாகும்.
உடலில் போதிய இரத்தம் இல்லையென்றால் கை விரல் நகங்கள் வெளுத்துப்போய் காணப்படும்.
விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் இரத்தத்தில் நிக்கோடின் விஷம் கலந்திருப்பதிற்க்கான அறிகுறியாகும்.
நகங்கள் சற்று உப்பி காணப்பட்டால் மூச்சு சம்மந்தமான நோய்கள் மற்றும் ஆஸ்துமா வருவதற்க்கான வாய்ப்புகள் உண்டு.
விரல் நகங்கள் சற்று நீல நிறமாக தென்பட்டால் இதயம் பலவீனமாக இருப்பதற்கு அடையாளமாகும்.
நகங்கள் மிகவும் சிவப்பாக இருந்தால் உடலில் இரத்தத்தின் அளவு சற்றே அதிகமாக இருப்பதை காட்டுகிறது. இவர்களுக்கு இரத்த கொதிப்பு வருவதற்கு
வாய்ப்புகள் உண்டு.
நகங்களில் சொத்தைகள் காணப்பட்டால் இவர்களுக்கு போதிய ஊட்ட சத்து இலை என்று அர்த்தம்.
லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல இரத்த ஒட்டத்தை குறிக்கும்.
மனிதன் இறந்த பிறகு, நகத்திற்கு கீழுள்ள தோலிலும், தசையிலும் உள்ள தண்ணீர் குறைந்து விடும். அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும் தோல் சுருங்கி இறுகி விடுவதால், நகம் மேலே நீளமாக பெரிதாக தெரிய ஆரம்பிக்கும். இதுதான் உண்மை.
நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, என்ன நோய் இருக்கும் என்று ஒரளவு கண்டுபிடித்து விடலாம்.
உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா? இல்லையா? என்பதை நகத்தைப் பார்த்தே சொல்லி விடலாம்.
கைவிரல் நகங்களைப் பார்த்தே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றும் கண்டுபிடித்து விடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக