செவ்வாய், 8 மே, 2018

பிறந்த குழந்தைகளின் ஆடைகளை பராமரிக்க சில வழிகள்....


பிறந்த குழந்தைகளின் ஆடைகளை பராமரிக்க சில வழிகள்....

 
★ பிறந்த குழந்தைகளின் ஆடைகளைச் சுத்தாமாக வைத்திருப்பது மிக அவசியம். குழந்தைகளின் சருமம் மிகமிக மென்மையானது. அவர்களுடய ஆடைகள் சரியான முறையில் பராமரிக்காமல் இருந்தால், சருமத்தில் அலர்ஜி உண்டாகும்.


★ நோய்தொற்றுகள் உண்டாகவும் வாய்ப்பு அதிகம் அதனால் குழந்தைகளின் ஆடைகளைப் பராமரிக்கும்போது சில அடிப்படையான விஷயங்களை மனதில்  கொள்வது அவசியம்.


★ எந்த வகை ஆடையாக இருந்தாலும் அதிக வெப்பத்தால் பாழாகிப் போகும், அதனால் குளிர்ந்த நீரில் குழந்தைகளின் ஆடைகளைத் துவைத்து, அவற்றை உலர்த்த்தும்போது நிச்சயம் அதிக வெயிலில் காய வைக்கக் கூடாது. மிதமான வெயிலில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்துதல் வேண்டும்.


★ சிரமம் பார்க்காமல், தனித்தனியே ஆடைகளைத் துவைப்பது நல்லது. துணியை துவைக்கும்போது வெளிப்புறம் அப்படியே துவைக்காமல், உள்புறமாகத் திருப்பித்  துவைத்தல் வேண்டும்.


★ குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவர்களின் ஆடைகளைத் துவைக்கப் பயன்படுத்துகிற டிடர்ஜெண்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில், குழந்தைகளின் மேனியில் அலர்ஜி ரேஷஸ் போன்றவை உண்டாகும்.


★ குழந்தைகளின் தரமான சுத்தமான ஆடைகள் மட்டுமல்ல, அவற்றை வைக்கும் இடங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். தூசு, ஈரப்பதம் இருக்கும் இடங்களில் குழந்தைகளின் ஆடைகளை வைக்கக் கூடாது. முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளின் ஆடைகளை தனியாக வைக்கலாம்.


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக