ஊளைச்சதை குறைய வேண்டுமா? இதை செய்து பாருங்க மாற்றம் தெரியும்!
மூக்கடைப்பு,சளி குணமாக கடுக்காய் பொடி,நெல்லிக்காய் பொடி இவைகளை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு,சளி குறையும்.கண் எரிச்சல் குணமாக அதிமதுரம்,கடுக்காய்,திப்பிலி, மிளகுப்பொடி,தேன் இவைகளை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்.குரல் மாற்றத்தை சரி செய்யகடுக்காய் தோலை எடுத்து வாயில் அதக்கிக்கொண்டு அதில் இருந்து வரும் உமிழ் நீரை விழுங்கிக்கொண்டு வந்தால் குரல் மாற்றத்தை சரி செய்ய முடியும்.
இருமல் குறையஅதிமதுரம்,கடுக்காய்,மிளகு இவைகளை ஒரே அளவாக எடுத்து லேசாக வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.முடி நரைக்காமல் இருக்க அருகம்புல் பொடி,நெல்லிப்பொடி,கடுக்காய்ப்பொடி இவைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் முடி நரைக்காது.ஊளைச்சதை குறையசோம்பு,கடுக்காய்த்தூள் சேர்த்து மண் சட்டியில் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி சுத்தமான தேன் கலந்து குடித்து வந்தால் ஊளைச் சதை குறையும். Thanks Tamil Truth
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக