வியாழன், 19 ஏப்ரல், 2018

தெரிந்த கொடைக்கானல் - தெரியாத சுவாரசியங்கள்! சுற்றுலா செல்வோர் பார்க்க வேண்டிய இடங்கள்!

தெரிந்த கொடைக்கானல் - தெரியாத சுவாரசியங்கள்! சுற்றுலா செல்வோர் பார்க்க வேண்டிய இடங்கள்!



தெரிந்த கொடைக்கானல் – தெரியாத சுவாரசியங்கள்! சுற்றுலா செல்வோர் பார்க்க வேண்டிய இடங்கள்!

கோடை காலம் வந்து விட்டது. வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி விடுமுறை நாட்களாக இருப்பதால், எங்கெங்கு செல்லலாம், ஒரு திட்டமிடல் இருக்கும். பெரும்பாலானவர்களின் விருப்பம், கோடை வெயிலைச் சமாளிக்கும், குளிர் பிரதேசங்களாகத் தான் இருக்கும்.
தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்றழைக்கப் படுகிறது. தற்போது நாம் காணும் இந்த கொடைக்கானல் நகரம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப் பட்டது. பிரையண்ட் பூங்கா, தேவாலயங்கள், நடைபாதைச் சாலை, ஏரி இவையெல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்டவை.
தொப்பி துாக்கும் பாறை, இரட்டை துாண்கள் போலத் தென்படும் மலைகள், குணா குகை, 500 ஆண்டு பழமையான மரம், குறிஞ்சி ஆண்டவர் கோயில் என, சுற்றுலா பயணிகளுக்காக பெரிய லிஸ்டே இருக்கிறது. 
காணல் என்பது ஒரு வகைச் செடி. அது இந்த மலையில் அதிகம் காணப்படும் ஒரு தாவர வகை. இந்த தாவரம், மாடுகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அதனால், இந்த ஊர் கோடை வாசஸ்தலம் என்பதால், கொடைக்கானல் என்ற பெயர் ஆனது.
 
இந்த கொடைக்கானலைப் போல, இந்த மலையைச் சுற்றிலும், கடியங்கானல், தாமற்சாலை வஞ்சன் கானல், கொச்சிகானல் போன்ற பல பகுதிகள் உள்ளன. சங்க காலத்தில் புகழ் பெற்ற குறிஞ்சி மலர்கள், இந்த மலையில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்றன.
தற்போது காணும் கொடைக்கானலுக்கு முன்பாக, இந்த ஊர் இருந்த பகுதி வேடப்பட்டி என்ற ஊரைச் சார்ந்ததாக இருந்தது. அந்த ஊர், தற்போது ஆதி கொடைக்கானல் என்றழைக்கப் படுகிறது.
 இது தான், ஆதியான கொடைக்கானல் நகரம். பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், மன்னர்கள் கோடை காலத்தில் இந்தப் பகுதிக்கு வருகை தந்துள்னர். கடியன் நெடு வேட்டுவன் என்பவன், இந்தக் கோடை மலைக்கு தலைவனாக இருந்தான், என்று புறநானுாற்றில் குறிப்பிடப் பட்டுள்ளனது.
பண்ணி என்ற குறுநில மன்னனும், இந்த கோடை நகரில் ஆட்சி செய்துள்ளான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவர்கள் ஆட்சி செய்த ஆதி கொடைக்கானல் எனப்படும் வில்பட்டியில், 18-ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த, குறிஞ்சிக் கடவுளான முருகன் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த வில்பட்டி, கொடைக்கானல் நகரிலிருந்து, 7 கி.மீ. தொலைவில் உள்ளது. Thanks Seithipunal 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக