புதன், 11 ஏப்ரல், 2018

தொப்பை குறைய இரவில் இதை மட்டும் சாப்பிடுங்கள்.

நாம் உண்ணும் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை இவை மூலமாக தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்படுகிறது. பொதுவாக குண்டாக இருக்கும் அனைவருக்குமே ஒல்லியாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். நாம் நமது வைத்தால் கண்டிப்பாக தொப்பையை குறைக்க முடியும். இந்த பதிவில் தொப்பையை குறைக்கும் பானத்தை பற்றியும் அதை எப்படி தயாரிப்பது என்பதை பற்றியும் பார்க்க போகிறோம்.

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்
  • வெள்ளரிக்காய் - 1
  • கொத்தமல்லி -1(கட்டு) 
  • எலுமிச்சை - 1
  • துருவிய இஞ்சி - 1( டேபிள் ஸ்பூன்)
  • கற்றாழை சாறு - (1 டேபிள் ஸ்பூன்)
  • தண்ணீர் - அரை டம்ளர்
வெள்ளரிக்காய்
இவற்றில் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. 100 கிராம் வெள்ளரிக்காயில் 95% நீர் உள்ளது. இவை எடை குறைக்க உதவுகிறது. உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் சீராக வைக்கவும் இது உதவுகிறது.

கொத்தமல்லி
கொத்தமல்லியில் கலோரிகள் குறைவாகவும் ஆண்டி ஆக்ஸைடுகள், தேவையான விட்டமின்கள், மற்றும் கனிம சத்து அதிகமாகவும் இருப்பதால் உடலை வறட்சி இல்லாமல் பார்த்து கொள்ளும்.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் கொழுப்புகள் உடலில் சேராமல் இருப்பதோடு தேங்கியுள்ள கொழுப்புகள் எளிதில் கரைத்து நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றி விடும்.

செய்முறை
இங்கே சொல்லப்பட்ட அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து வடிகட்டி தினமும் இரவு படுக்கும் முன் குடித்து வந்தால் தொப்பை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும். இவை எல்லாமே எளிதில் கிடைக்க கூடியது ஒன்று தான். எனவே தொப்பை உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் இதை செய்து உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ளுங்கள்.

இதை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்டில் கூறவும். நன்றி வணக்கம். Thanks Trending Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக