தாய்ப் பாலிற்கு அடுத்து ஆட்டுப் பாலே சிறந்த பானம்..! ஏன் தெரியுமா..?
மேற்கத்தேய நாடுகளில் ஆட்டுப்பாலின் சிறப்புகள் பற்றி பெரிதாக யாரும் அறிந்தில்லை. லக்ரோஸ் சமிபாட்டு பிரச்சைனை உள்ளவர்களிற்கு ஆட்டுப் பால் சிறந்தது.
இதில் அதிகப்படியான கொழுப்பமிலங்கள் இருப்பதனால் மாட்டுப்பாலை விட சிறப்பானதாக ஆட்டுப்பால் உள்ளது.
ஆட்டுப் பாலிலும் பாலாடைக்கட்டிகள், ஜஸ்கிறீம், தயிர், பட்டர் போன்றவற்றை தயாரித்துக் கொள்ளலாம்.
இதில் உள்ள மருத்துவ குணங்களால் தாய்ப் பாலிற்கு அடுத்து ஆட்டுப் பாலே சிறந்த பானமாக உள்ளது.
தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதிலும் இருப்பதனால் இலகுவாக சமிபாடு அடையக் கூடியது.
இதில் புரோட்டின், மாபொருட்கள், குலுக்கோஸ், சோடியம், கல்சியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் ஏ, பி2, சி மற்றும் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆட்டுப்பால் குடிப்பதனால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள்.
1. சமிபாட்டிற்கு உதவும்.
ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பமிலங்கள் சமிபாட்டை அதிகப்படுத்துவதுடன், இதில் தயாரிக்கப்படும் மென்மையான தயிர் எரிச்சலை ஏற்படுத்தாது சமிபாடு நடைபெற உதவுகிறது.
2. எலும்புகளை வலிமைப்படுத்தும்.
ஒரு கப் ஆட்டுப் பாலில் அதிகளவான கல்சியமும் 327 மில்லிகிராம் கனியுப்புக்களும் இருப்பதனால் இவை பசுப் பாலை விட சிறந்தது.
மேலும் இது எலும்பு தேய்வடைவதைத் தடுத்து வலிமைப்படுத்துகிறது.
3. வீக்கத்திற்கு எதிராகச் செயற்படும்.
இதில் காணப்படும் நொதிப் பொருளான oligosaccharides வயிற்றில் ஏற்படும் வீக்கத்தையும், கோளாறுகளையும் குணப்படுத்துவதுடன், குடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது.
4.இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
இதில் காணப்படும் கொழுப்பமிலங்கள் உடலின் கொழுப்பின் அளவை சமநிலைப் படுத்துவதுடன், பக்க வாதம், மாரடைப்பு, போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும்.
அத்துடன் இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது.
5.மெட்டபோலிசத்தை தூண்டும்.
5.மெட்டபோலிசத்தை தூண்டும்.
பசுப் பாலை விட ஆட்டுப்பாலில் அதிகளவான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
20 வீதம் விட்டமின் பி, பொட்டாசியம், பொஸ்பரஸ் காணப்படுவதனால் சமிபாட்டுத் தொகுதியை மிருதுவாக்குவதுடன், மெட்டபோலிசத்தை தூண்டுகிறது.
6. சருமத்தைப் பாதுகாக்கும்.
இதில் காணப்படும் triglycerides மற்றும் கொழுப்பமிலங்கள் சருமத்தை ஈரலிப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.
விட்டமின் ஏ செறிந்து காணப்படுவதனால் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
மேலும் இதில் உள்ள lactic அமிலம் சருமத்தில் உள்ள இறந்த கலங்களை நீக்குவதற்கு உதவும்.
7. ஊட்டச்சத்துக்களையும் கனியுப்புக்களையும் உறிஞ்சுவதற்கு உதவும்.
பாலில் உள்ள கனியுப்புக்களான இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ், மக்னீசியம் சமிபாட்டை இலகுபடுத்தும்.
அத்துடன் உடல் இரும்புச் சத்தை பயன்படுத்தும் அளவை அதிகப்படுத்தி சிவப்பு அணுக்களின் அளவை அதிகரித்து இரத்தசோகையை வராமல் தடுக்கும்.
8. வளர்ச்சிக்கும் விருத்திக்கும் உதவும்.
தினமும் ஆட்டுப்பால் குடிப்பதனால் அதில் உள்ள புரோட்டின் உடல் வலர்ச்சிக்கும், விருத்திக்கும் உதவுகிறது.
9. மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
இதில் காணப்படும் கொழுப்பு படபடப்பை குறைப்பதுடன், linoleic அமிலம் மூளை வளர்ச்சி அடைவதை அதிகப்படுத்துவதுடன், ஞாபக சக்தியை கூர்மைப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
10. நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
இதில் உள்ள செலினியம் தொற்றுக்களால் நோய்கள் வராமல் தடுப்பதுடன், இதில் காணப்படும்.
கனியுப்புக்கள் நோய் எதிர்ப்பு சக்தி தொகுதியை சிறப்பாக செயற்படச் செய்து, நோய்கள் வராமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். Thanks Today Jaffna
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக