புதன், 11 ஏப்ரல், 2018

கோடைக்காலத்தில் முடி உதிர்வதை தடுக்க ஏளிய வழிகள்.

கோடைக்காலத்தில் முடி உதிர்வதை தடுக்க ஏளிய வழிகள்.

வணக்கம்
சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக தலை முடியின் மீது படும் போது தலை முடி அதிகமாக வறட்சி அடைந்து முடி உதிர ஆரம்பித்து விடும். எனவே வெயிலில் செல்லும் முன் தலைக்கு ஏதேனும் தொப்பி அல்லது துணி அல்லது குடை கொண்டு மறைத்த வாரு செல்வது நல்லது. இதனால் முடியின் மீது சூரிய வெப்பம் படுவதை தடுக்கலாம். இல்லாவிட்டால் வெப்பத்தால் முடி வலுவிழந்து முடி உதிர்ந்து விடும். இந்த பதிவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலை முடியை கோடைக்காலத்தில் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

முதலில் தலையில் வியர்வை இருந்தால் அது மயிர் துளைகளில் அடைப்புகளை ஏற்படுத்தி முடி உதிர்தலை உண்டாக்கும். எனவே தலையில் வியர்வை வந்தால் துணியை கொண்டே அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டே துடைக்கவும்.

மேலும் தலைக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய நெல்லிக்காய் எண்ணெய்யை தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்கு குளிர்ச்சி உடனும் மென்மையாகவும் இருக்கும். இந்த எண்ணெய்யை இரவில் தேய்க்க கூடாது. பகலில் தலையில் தேய்த்து வந்தால் தலை குளிர்ச்சி உடன் இருக்கும்.

அதேபோல் தலைக்கு கற்றாழை மற்றும் எலுமிச்சை கலந்து தேய்த்து குளிக்கலாம். அது தலைமுடியை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்.

உங்கள் முடி எப்போதும் குளிர்ச்சி உடன் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் மேற்க்கொண்டால் உடல் வெப்பம் நீங்குவதோடு தலை எப்பொழுதும் குளிர்ச்சி உடன் இருக்கும்.

அடுத்து முக்கியமாக உண்ணும் உணவு கூட முடி உதிர்வதை தடுக்கும். எனவே பால், காய்கறிகள், முட்டை, மற்றும் பருப்பு வகைகளை எடுத்து கொள்வது நல்லது. இதனால் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன் மற்றும் கால்சியம் மற்றும் கனிம சத்துக்கள் கிடைத்து முடி உதிர்வதை நின்று முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். கோடைகாலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் இது முடியில் உள்ள செல்களை வறட்சி அடையாமல் பார்த்து கொள்ளும்

இந்த பதிவில் கூறியவற்றை செய்து உங்கள் முடியை பாதுகாத்து கொள்ளுங்கள். இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி வணக்கம். Thanks Trending Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக