வியாழன், 19 ஏப்ரல், 2018

பலாப்பழம் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.

பலாப்பழம் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.


பலாப்பழம் என்றாலே நம் அனைவரின் வாயிலும் எச்சில் ஊறும். இந்த பழம் தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் விற்கப்படுகிறது. ஆனால் நாம் தான் அதை வாங்கி உண்ண மறுக்கிறோம். இந்த பழத்தின் நன்மைகள் தெரிந்தால் இனி நீங்கள் இதை உண்ணாமல் இருக்கமாட்டீர்கள்.

ஜீரண சக்தி:
இதில் அதிகம் நார்சத்து மற்றும் புரத சத்து உள்ளதால், இது குடல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக உள்ளது. உடலில் உள்ள அதிகபடியான வாயு, மலசிக்கல் டயேரியா போன்றவற்றை தடுக்கிறது. உடலின் ஜீரண சக்தி மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரித்து தொப்பையைக் குறைக்க உதவும்.

இரத்தக் கொதிப்பு :
இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. எனவே இது உடலின் இரத்த ஓட்டத்னத சீர் செய்கிறது. இதனால் உடலின் மன அழுத்தம் குறைகிறது.எனவே இது இரத்த அழுத்தத்திற்கு நல்ல மருந்து.


வயதாவதை தடுக்கிறது:
அதிக அளவு பலாப்பழம் உண்பதால் உடலுக்கு அதிக நன்மை ஏற்படுகிறது. இதை உண்பதால் முதுமை அடையும் போதும் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. தோல் மினுமினுக்கவும் இது உதவுகிறது.

கேன்சர் எதிர்ப்பு :
இதில் அதிக அளவு வைட்டமின் பி,வைட்டமின் சி,வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செரித்துள்ளது. எனவே இந்த பழத்தை அதிகம் உண்பதால் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும் தன்மை உடையது.

எலும்புகள் பலம் பெற:
இதில் காப்பர், மெக்னீசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் செறிந்துள்ளது. இனவ அனைத்துமே எலும்புகளின் வலிமை அதிகரிக்க கூடியவை. எனவே இவற்றை உண்டால் எலும்புகள் பலம் பெறுவது உறுதி.
Thanks isakki 5555

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக