செவ்வாய், 3 ஏப்ரல், 2018

கல்யாணத்தில் பெண்ணுக்கும் மாப்பிள்ளைகும் ஏன் பால் பழம் கொடுக்கிறார்கள்


கல்யாணத்தில் பெண்ணுக்கும் மாப்பிள்ளைகும் ஏன் பால் பழம் கொடுக்கிறார்கள்?

ஏனென்றால்

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏறபடலாம்

அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ அது போல்

கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்

ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும்  நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்

இது இராமாயணம் காலத்திலேயே  உள்ள பழக்கம் என பூர்வர்கள் கூறியுள்ளனர்

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல

இந்துக்களின் ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக