உடலுக்கு ஆரோக்கியம் தரும் தண்ணீர்
உடல்நிலையை எப்போதும் ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு தண்ணீர் உதவுகிறது. தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் சக்தி அதிகரிக்கிறது.
உடல் நலத்தை புதுப்பிக்கும் சக்தியும், வாழ்நாளை அதிகரிக்கும் சக்தியும் தண்ணீருக்கு உண்டு. நெஞ்சு எரிச்சல், தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி, உடற்சோர்வு போன்றவை உண்மையில் நோய்கள் அல்ல. இவையெல்லாம் உடலில் நீர்க்கூறு அகன்று விட்டால் ஏற்படும் பிரச்சினைகளே.
எனவே இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளானோர் தாகம் இல்லை என்ற போதிலும் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால் மேற்கண்ட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவுகள் படிவதால் மாரடைப்பு வரும். இதனை தடுக்க வேண்டுமானால் அதிக அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். ஆதலால் உடல் ஆரோக்கியத்துடன் வாழ நினைப்பவர்கள் தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவை குறைத்து, அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடையை குறைக்க முடியும். அதிக அளவு தண்ணீர் குடிப்பது சிறந்த முகத்தோற்றத்தையும், உடல் பளபளப்பையும் கொடுத்து, தோலில் வறண்ட நிலையை தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கிறது. ரத்தம் மற்றும் நிணநீர் சுரப்பிகள் மூலம் உடலின் எல்லா பகுதிகளுக்கும் சத்துக்களையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்ல தண்ணீர் போதுமான அளவு தேவை. உடலில் எப்போதும் சீரான வெப்பநிலை தொடர தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
அதிக அளவு தண்ணீர் குடிப்பது கோபத்தை கட்டுப்படுத்தும். மனிதன் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் தண்ணீர் உதவுகிறது. ஆகவே தினமும் காலையில் தண்ணீர் குடித்து விட்டு உங்களின் அன்றாட பணிகளை தொடங்குங்கள். நாள் முழுவதும் உற்சாகமாக இருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக