வியாழன், 19 ஏப்ரல், 2018

உங்களது புன்னகையை மீண்டும் வசீகரமானதாக மாற்றுங்கள்! பற்களை வெண்மையாக்க 6 ஆயுர்வத டிப்ஸ் இதோ...


உங்களது புன்னகையை மீண்டும் வசீகரமானதாக மாற்றுங்கள்! பற்களை வெண்மையாக்க 6 ஆயுர்வத டிப்ஸ் இதோ...



உங்களது புன்னகையை மீண்டும் வசீகரமானதாக மாற்றுங்கள்! பற்களை வெண்மையாக்க 6 ஆயுர்வத டிப்ஸ் இதோ
நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்ததும் அதன் பிறகும் பல முறை காபி அல்லது டீ குடிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளோம்.
சிலர், பல் துலக்கும் முன்னரே டீ குடிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்! இதன் காரணமாக பற்களின் விரும்பத்தகாத கறைகள் படிந்துவிடுகின்றன. இதன் விளைவாக பற்கள் சொத்தையாக கூடும். அதற்கு முக்கிய காரணம் பாக்டீரியா சீரழிவு.
உங்களது புன்னகையை பற்றிய தன்னம்பிக்கை குறைவு ஏற்படுவதுடன், பற்களின் கறைகள் உங்களது ஒட்டுமொத்த பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். பற்களில் படியும் கறைகள் தான் பாக்டீரியாக்களுக்கு தீனி போடுகின்றன. அதனால் பற்கள் சொத்தையாகி ஈறுகளில் உடனேவோ அல்லது சிறிது காலத்துக்கு பிறகோ நோய் ஏற்படலாம்.
மேலும், பாக்டீரியா சீரழிவு, வாய் துற்நாற்றத்துக்கும் காரணமாகிறது. இது அனைவராலும் விரும்பத்தகாத ஒன்று தானே .

காபி & டீ குடிப்பதை நிறுத்துவது தான்இதற்கு தீர்வா?
காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தால் உடலுக்கு எந்த கேடும் இல்லை, இன்னும் சொல்லப் போனால் அவை நமது உடலுக்கு நன்மையை தான் செய்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?
சரி என்ன செய்வது, ஒரு பெரிய பல் கிளினிக்கில் காஸ்ட்லியான அப்பாயிண்ட்மென்ட் வாங்கி காத்திருக்க வேண்டுமா? இல்லை அதை விட ஒரு முழுமையான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டுமா? நம்மில் பெரும்பாலானோர் ஒரு முழுமையான தீர்வையே விரும்புவோம் ஏனெனில் அது இயற்கை முறையில் பக்க விளைவுகள் இன்றி சரி செய்யும். காபி மற்றும் டீ கறைகளை நீக்கவும் நீடித்த டென்டல் பராமரிப்புக்கு உதவவும் சில ஆயுர்வேத குறிப்புகளை இப்போது நாம் காண்போம்.
டிப் #1: அடிக்கடி குடிப்பதை குறையுங்கள்


அடிக்கடி காபி டீ குடிப்பதை குறைப்பதனால் பற்களில் உண்டான கறைகளை குறைக்கலாம். உதாரணமாக, நீங்கள் இப்போது ஒரு நாளுக்கு 4 கப்புகள் குடிக்கிறீர்கள் என்றால் அதனை முதலில் 3 ஆக குறைத்து பின்னர் 2 ஆக ஆக்கலாம்.
"அதிகளவு குடிப்பதனால் இந்த பானங்களில் உள்ள உஷ்ணா மற்றும் ருக்க்ஷா குணநலன்களின் காரணத்தால் உடலில் பித்த தோஷம் அதிகரிக்கும் இதனால் மிகையான அமில சுரப்பு ஏற்பட்டு மஞ்சள் அல்லது பழுப்பு நிறம் (பித்த விருத்தி) மற்றும் கருப்பு நிறம் (வாத விருத்தி) பற்களில் படியும். காப்பி மற்றும் டீ ஆகியவை கஷாயம் (துவர்ப்பு) மற்றும் டிக்டா (மிதமான கசப்பு) குணம் கொண்டவை இதனால் வாத தோஷம் அதிகரித்து கப தோஷத்தை அது குறைக்கும்" என லீவர் ஆயுஷ், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் ஆயுர்வேத ஸ்பெஷலிஸ்ட்டான டாட்டர். மஹேஷ் டி.எஸ் கூறுகிறார்.
டிப் #2: பானங்களுக்கு இடையேயானநேர இடைவெளியை அதிகரிக்கவும்
குறைந்த நேர இடைவெளியில் அதிக எண்ணிக்கை டீ மற்றும் காபியை குடிப்பதால் பற்களில் கறைகள் தோன்றலாம். அதனால் போதிய நேர இடைவெளியில் குடிக்க பழக வேண்டும். எனவே, நீங்கள் காலையில் ஒரு கப் குடித்தால், அடுத்த கப்பை மாலையில் பருகலாம்.
டிப் #3: வாயை நன்றாக கொப்பளிக்கவும்


காப் அல்லது டீ குடித்த பின்னர் வாயை நன்றாக நீரால் கொப்பளிக்க வேண்டும். இதனால் கறைகள் படிய தொடங்கி ஈறுகளில் ஒட்டிக்கொள்ளும் முன்னர் அதனை நீக்கிவிடலாம்.
"பற்களில் கறைபடிவதன் முக்கிய காரணம் டீ மற்றும் காபியில் இருக்கும் டானின்ஸ் தான், பருகிய உடனே நீர் கொண்டு கொப்பளிப்பதால் வாய் சுத்தமாகி பற்களிலும் ஈறுகளிலும் கறைகள் படியாமல் இருக்கும்", என்கிறார் டாக்டர். மஹேஷ்.
டிப் #4: ஒரு நாளில் இரண்டு முறை பல்துலக்கவும்


வாயை சுத்தமாக வைத்து கொள்ள, லீவர் ஆயுஷ் ஆன்டி-கேவிட்டி க்ளோவ் ஆயில் டூத்பேஸ்ட் போன்ற ஒரு நல்ல டூத் பேஸ்டால் ஒரு நாளுக்கு இரு முறை பல் துலக்க வேண்டும் மற்றும் அடிக்கடி ஃப்ளோசிங் செய்ய வேண்டும். இனிப்புகளை அதிகமாக உண்பதையும் தவிர்த்தல் நலம்.
இது போன்ற நல்ல பழக்கங்களை கடைபிடித்தால் உங்களது பற்களை ஆரோக்கியமாகவும் கறைகள் மற்றும் சொத்தை ஏற்படாமலும் பாதுகாக்க
லாம்.
டிப் #5: ஆயுர்வதிக் டூத்பேஸ்டுகளைபயன்படுத்தவும்
இயற்கையான பொருட்கள் நிறைந்த ஆயுர்வேத டூத்பேஸ்டுகளுக்கு மாறுவது நன்மை பயக்கும்.
டூத் பேஸ்டில் உப்பு இருந்தால் அதிக நன்மை கிடைக்கும். உதாரணமாக ஆயுஷ் வொயிட்டனிங் டூத் பேஸ்டுகளில் கல் உப்பு,அரிமேதாஸ் தைலம் அடங்கியுள்ளன. இவை பற்களின் கறைகளை நீக்கி வெண்மையாக்குகின்றன.
டிப் #6: ஊட்டசத்து நிறைந்த உணவினைஉண்ணுங்கள்


கால்சியம் மற்றும் ஃபாஸ்பரஸ் நிறைந்த உணவுகளான பால், தயிர் மற்றும் கீரைகளை உண்பது பற்களுக்கு நல்லது. இந்த தனிமங்கள் உங்களது பற்களை உறுதியாக்கி சொத்தையாகாமல் காக்கின்றன.
*டாக்டர் மஹேஷ் ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் த்ரவ்யகுணா பிரிவின் விரிவுரையாளரும் எச்ஓடி யும் ஆவார். அவர் கூறுவது "காபியும் டீயும் தூக்கத்தை போக்கி சுறுசுறுப்பு அளித்தாலும், அதில் உள்ள டேனின், பற்களில் கறைகளை ஏற்படுத்துகின்றது. உறுதியான எண்ணம் என்பது தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை எதிர்க்கும் ஆயுதமாகும். கற்றுக்கொண்ட விஷயங்களை நமது வாழ்வில் பின்பற்றுவதே நாம் பெற்ற அறிவின் பயனாகும்."
இக்கட்டுரையை பகிர்வீர்!
இந்த கட்டுரை உங்களுக்கு தெரிந்த யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதை நாங்கள் அறிவோம். எனவே இதை அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். இதன் மூலம் அவர்களது பற்களின் கறையும் வாய் துற்நாற்றமும் நீங்கட்டுமே! நன்றி தங்க தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக