ஆன்ட்டிபயாட்டிக் (antibiotics) எனும் அரக்கன்
ஆன்ட்டிபயாட்டிக் எனும் மருந்து முதன் முதலில் கண்டறியப்பட்டபொழுது அதன் நோய் எதிர்க்கும் பண்புகளை பார்த்து வியந்து போய் இருந்த மனித சமூகம் இன்று அதே மருந்தை பார்த்து பயப்படும் நிலைக்கு வந்துள்ளது.அதேசமயம் அதன் பயன்பாட்டின் அளவும் மிக மிக அதிகரித்துள்ளது.
ஆன்ட்டிபயாட்டிக் என்றால் என்ன?
நுண்ணுயிர் கொல்லிகள் எனும் ஆன்டிபயோடிக்கள் சாதாரணமாக நம்மில் ஏற்படும் நோய் தாக்குதலை குறைத்து நோயை அழிக்கவும் நோய் கிருமிகளை அது உருவாகும் முன்னரே அழிக்கவும் உதவுகிறது.
நுண்ணுயிர் கொல்லிகள் எனும் ஆன்டிபயோடிக்கள் சாதாரணமாக நம்மில் ஏற்படும் நோய் தாக்குதலை குறைத்து நோயை அழிக்கவும் நோய் கிருமிகளை அது உருவாகும் முன்னரே அழிக்கவும் உதவுகிறது.
ஆன்ட்டிபயாட்டிக்
இந்த ஆன்டிபயோடிக்கள் பொதுவாக ஒரு குறைந்த நச்சுத்தன்மை உடைய வகையில் அதிக மருத்துவ குணம் கொண்டதாக செயற்க்கையாக ஆய்வகங்களில் உருவாக்கப்படுகிறது.இதில் முதன்முதலில் பெனிசிலின் எனும் ஆன்டிபயோடிக் உருவாக்கப்பட்டது.நாளடைவில் அணைத்து நோய்களுக்குமே நுண்ணுயிர்கொல்லிகள் கிடைக்கின்றன.சாதாரண சளி இருமலுக்கும் கூட மருந்தாக மக்கள் இதனை பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டனர்.அனால் முறையான மருத்துவரின் அனுமதியின்றி இந்த மருந்துகளை உட்கொள்ளுதல் மிக மிக பேராபத்தானது.
முதன் முதலில் இந்த மருந்துகளை கண்டறிந்தவர் அலெக்சாண்டர் பிளமிங் என்பவர்.தனது ஆய்வகத்தில் இருந்த ஒரு பொருளில் எதேச்சையாக இதனை கண்டறிந்தார்.இதற்க்காக அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
ஆன்டிபயோடிக் ரெசிஸ்டன்ஸ்
எந்த மருந்து நமக்கு நன்மையாக அமைந்ததோ அதுவே தற்பொழுது பூதாகரமாக மாறி நம் முன் நிற்கின்றது.பொதுவாக மருத்துவர் இந்த ரக மருந்துகளை பரிந்துரைக்கும் பொழுது அந்த முழு கால அளவிற்கும் பயன் படுத்த வேண்டும்.உதாரணமாக ஒரு வாரம் பயன்படுத்தும்படி அந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தால் ஒரு வாரம் முழுதாக அதனை பயன்படுத்த வேண்டும்.அனால் இரண்டாம் நாளே நோய் குணமாகி விட்டது என நம்மில் பார் மருந்து உட்கொள்வதை நிறுத்தி விடுவோம்.இது மிக தவறான ஓன்று.

இவ்வாறு நாம் இந்த நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை நிறுத்தும் பொழுது உடலில் எஞ்சியுள்ள அந்த நோய்க்கிருமிகள் மீண்டும் வளர்ந்து குறிப்பிட்ட மருந்தின் எதிர்ப்பு சக்தியுடன் பல்கி பெருகும்.மீண்டும் நாம் அதே மருந்தை உட்கொள்வோமானால் அது அந்த மருந்தை தாக்கி எதிர்க்கும் அளவிற்கு வலிமை பெற்றிருக்கும்.எனவே நாம் அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவோம்.இது ஆன்டிபயோடிக் ரெசிஸ்டன்ஸ் (antibiotic resistance) எனப்படும்
இந்த நிலை நீடித்தால் அனைத்து நோய் கிருமிகளும் இந்த மருந்துகளுக்கு எதிராக முழு சக்தி பெற்று விடும்.எதிர் காலத்தில் நோய்களுக்கு எதிராக இவற்றால் செயலாற்ற இயலாது என்ற நிலை உருவாக இயலும்.ஏனெனில் இந்த ரெசிஸ்டன்ஸ் நாளடைவில் அதிகமாகி கொண்டே வருவதும் ஒரு காரணம்.எனவே இதற்கு மாற்றாக பல்வேறு ஆய்வுகளும் நடந்து வருகின்றன .
இந்த மருந்துகள் முக்கியமாக பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்தாக்குதல்களை எதிர்ப்பதற்கு பயன்படுகின்றன.ஆனா இவற்றால் சளி இருமல் போன்ற வைரஸ்களினால் ஏற்படும் நோய் தொற்றுகளை சரி செய்ய இயலாது.எனவே சளி இருமல் போன்ற சில நோய்களுக்கு நாமாக ஆன்டிபயோடிக் மருந்துகளை உட்கொள்வதை தவிர்ப்போம்
மருத்துவர்களும் இந்த ஆன்டிபயோடிக் மருந்துகளை பரிந்துரைக்கும் முன்னர் நோயாளியின் உடல் நிலை மற்றும் நோயின் தன்மை நோய்த்தொற்று எதனால் ஏற்பட்டது என்பது போன்ற சில பண்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். Thanks ech Wings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக