வியாழன், 19 ஏப்ரல், 2018

பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு?


பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? 

கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் பாவாடை தாவணி

இளம்பெண்களுக்கு நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா! கூடவே இலவச இணைப்பு க்களாக‌ அத்தனை அத்தனை நோய்களும் அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி (Half Saree) கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை (Saree) கட்டினார்கள். இதற்கு காரணம் என்னவென்று எப்போதாவது யோசித்ததுண்டா நீங்கள்??
பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்புள் உள்ள‍ இடமும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.
ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணமடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையினை காத்திடவே நீர்கட்டிகளை கர்ப்பபைக்குள் எற்படுத்தி உடல் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது. இதனை அறியாமல் இன்றை இளம்பெண்கள் இருப்ப‍து நமக்கு வேதனையின் உச்ச‍ம்… அவர்களோ நோய்களின் எச்ச‍ங்களாக இருக்கின்றனர்.
                                
கம்ப்யூட்டர் மொழி (Computer Language)யை கற்றுக்கொண்டவர்க்கு உடல்மொழி (Body Language)யை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை. ஆதிகாலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்தஉடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டி யிட்டு வேலை செய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து மற்றும் நின்று கொண்டு செய்யும் வேலை.

IT சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் ப‌ணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் (Blood Circulation) தடை படுகிறது. ஆகையால் ஹார்மோன்களும் சரிவர இயங்கு வதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து (Night Duty), பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் (Body Heat) மிகும்.இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே.
சகோதரிகளே தயவுசெய்து ஒன்றைமட்டும் நன்கு புரிந்துகொள்ளு ங்கள். நீங்கள் நாகரீக வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் 10அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதனை மட்டும் மறவாதீர்கள் . நம் பாட்டி காலத்தில் நாம் கேள்விப்படாத புதுப்புது பெயர்களில் பெண்க ளுக்கு நோய்கள் இப்போது கேள்விப்படுகிறோம்… இதற்கு ந‌ம் புதிய வாழ்க்கை முறையே காரணம்.


வேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேகாத உணவை வேகமாக உண்டு வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி வேகமாக உழைத்து வேகமாகவே மடிந்தும் விடுகிறோம். புதிய வாழ்க்கை  முறையில்.. பருவமடையம் பிள்ளைகளை நகரில் உள்ள இளம் தாய்மார்… பக்குவமாக கவனிக்காமல் விடுவதும் கர்ப்பப்பை வியாதிகளுக்கு காரணம் ஆகிறது.

Thanks seythipunal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக