பெண்கள் மட்டும்படிக்கவும்..
ஆங்கிலத்தில் பெல்விக் இன்ஃப்லமேட்ரி டிசீஸ் ( PID ) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நோய் பெண்களின் இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடலுறவு மூலம் பரவும் பாக்டீரியாக்கள் பெண்களின் இனப்பெருக்க உறுப்பின் உள் செல்வதால் கருப்பைக்கு பரவுகிறது.
இந்த நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள் காரணமாக உள்ளது. ஆனால் பொதுவாக மேக வெட்டை நோய் மற்றும் க்ளமைடியா தான் காரணமாக உள்ளது.
இந்த நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள் காரணமாக உள்ளது. ஆனால் பொதுவாக மேக வெட்டை நோய் மற்றும் க்ளமைடியா தான் காரணமாக உள்ளது.
பலருடன் உறவு கொள்வது மற்றும் நோய் தொற்று பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது என மேலும் பல்வேறு காரணங்கள் உள்ளன.
இந்த நோய் உள்ள சில பெண்களுக்கு அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள். பொதுவாக தென்பட்ட அறிகுறிகளை தெரிந்துகொள்ள கீழே தொடரவும்.
அறிகுறிகள் :
வயிறு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, துர்நாற்றத்துடன் இரத்தப்போக்கு, மாதவிடாய் சிக்கல், உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுதல் அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல் மற்றும் காய்ச்சல்.
இடுப்பு அழற்சி நோய் கருப்பை மற்றும் கருக் குழாயில் காயங்களை ஏற்படுத்துகிறது.
சில வீட்டு வைத்தியம் :
1. பூண்டு :
பூண்டு பாக்டீரியாக்கள் பரவாமல் தடுப்பதோடு இடுப்பு அழற்சி நோய் மீண்டும் வராமல் தடுக்கிறது.
செய்முறை :
- 2 அல்லது 3 பூண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஆலிவ் எண்ணெய் உடன் செந்நிறம் வரும் வரை வறுக்கவும்.
- எண்ணெய்யை பூண்டில் இருந்து பிரித்தெடுக்கவும்.
- சூடு குறையும் வரை குளிர்விக்கவும்.
- காட்டன் பஞ்சை இந்த எண்ணெயில் நனைந்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கவும். பஞ்சை நீக்கி விட்டு எண்ணெய் மட்டும் வைக்கலாம்.
- 1/2 அல்லது 2 மணி நேரம் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு பாதிக்கப்பட்ட இடத்தை நன்கு சுத்தம் செய்யவும்.
- நோய் தொற்று குணமடையும் வரை இந்த முறையை மேற்கொள்ளலாம்.
2. மஞ்சள் :
கிருமி நாசினியாக மஞ்சள் பயன்படுகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராட மஞ்சள் உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகிறது.
செய்முறை :
- 1 ஸ்பூன் மஞ்சளை பாலில் கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- குணமடையும் வரை இந்த மஞ்சள் பாலை பருகவும்.
3. தயிர் :
தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால் கெடுதல் தரும் பாக்டீரியாக்களை கொன்று நோய் பரவுவதை தடுக்கிறது. அந்த இடத்தில் pH அளவை சமநிலை அடைய செய்கிறது.
செய்முறை :
- பாதிக்கப்பட்ட இடத்தில் தயிரை தடவவும்.
- 1 அல்லது 2 மணி நேரம் கழித்து சுத்தம் செய்யவும்.
- குணமடையும் வரை பயன்படுத்தவும்.
- தினமும் 2 அல்லது 3 கின்னம் தயிர் சாப்பிடுவது நல்லது.
குறிப்பு :
- உடலுறவு மூலம் பரவும் நோய்கள் எதாவது உங்களுக்கு வரக்கூடிய அபாயம் இருந்தால் மருத்துவரை ஆலோசித்து விட்டு மேலே உள்ள மருத்துவத்தை மேற்கொள்ளவும்.
- மருத்துவர் பரிந்துரை செய்த மருந்தை உட்கொள்வது நல்லது.
- தினமும் குளிக்க வேண்டும்.
- புகை பழக்கம் இருந்தால் உடனே கைவிடவும்.
- ஒருவருக்கொருவர் என்று வாழ்ந்தால் நல்லது.
- சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
- மருத்துவர் அனுமதி இல்லாமல் இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ஏனென்றால் இரும்பு சத்துக்கள் பாக்டீரியாக்கள் வளர்வதை ஊக்குவிக்கிறது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டாம். Thanks NEWS HOT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக