இதை செய்தால் உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட கொட்டாது.
இன்றைய சூழ்நிலையில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்தல் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த பதிவில் பார்க்க போகும் எண்ணெய் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, அடர்த்தியான முடி வளர மற்றும் கூந்தல் ஆரோக்கியம் என அனைத்து வகையிலும் உதவியாக இருக்க கூடியது.
வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் ஒரு முடி கூட உதிராது.
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ- 7
- செம்பருத்தி இலை -7
- வேப்பிலை ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
- தேங்காய் எண்ணெய் -250 மி.லி
முதலில் செம்பருத்தி பூவையும், இலைகளையும் சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸி அல்லது அம்மியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்த விழுதை தேங்காய் எண்ணெயில் சேர்க்க வேண்டும். பின் இதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
செம்பருத்தி முதலில் போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கறிவேப்பிலை மற்றும் வேப்பிலையை சேர்க்க வேண்டும். செம்பருத்தி, வேப்பிலை, கறிவேப்பிலை போன்றவை ஒன்றாக கலந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பாட்டிலில் ஊற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வாருங்கள். அல்லது இரவில் தேய்த்து பின் காலையில் சீயக்காய் கொண்டு தலையை அலசி கொள்ளலாம். இந்த எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டும், முடியை பளப்பளப்பாக வைத்து கொள்ளும், பொடுகை போக்கும். நரைமுடியை போக்கும், தலை அரிப்பை தடுக்கும்.
ஆகவே இந்த எண்ணெயை வீட்டிலேயே செய்து பயன்படுத்தி வாருங்கள். நண்பர்களே! இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு எந்த விதமான மருத்துவ குறிப்பு வேண்டும் என்பதை கமெண்டில் தெரிவிக்கவும். நன்றி வணக்கம். Thanks Trending Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக