வியாழன், 19 ஏப்ரல், 2018

கிராம்பு உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?

கிராம்பு உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?


இந்தோனேசியா, இந்தியா, பாக்கிஸ்தான், மற்றும் கிழக்கு ஆபிரிக்கா போன்ற ஆசிய நாடுகளில் கிராம்பு மசாலா வகைகளில் ஒன்றாகும். இது இந்தோனேசியாவில் மாலுக் தீவுகளுக்கு சொந்தமானது. அவை உலகெங்கிலும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக ஆசியாவில் கிராம்புகள் அன்றாட உணவு பொருட்களில் அடிப்படை பொருளாக உள்ளது.

சத்துகள்:
இதில் 100 கிராம் கிராம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள், 65 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் புரோட்டீன், 13 கிராம் கொழுப்பு சத்து, 2 கிராம் சர்க்கரை, 274 கிலோ கலோரி ஆற்றல் மற்றும் 33 கிராம் நார் சத்து . மேலும் கிராம்புவில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை அடங்கும். வைட்டமின் சி, தியாமின், ரிபோப்லாவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் பி 6, வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்மைகள்:
கிராம்பு தலைவலி நீக்கும் பண்பு உடையது. சில கிராம்புகளை எடுத்து அதில் கல் உப்பு மற்றும் நீர் விட்டு அரைத்து பாலில் சேர்த்து குடிக்க தலைவலி நீங்கும்.

வாய் சம்மந்தபட்ட அனைத்து நோய்களுக்கும் கிராம்பு நல்ல தீர்வு. இதில் வாய் துர்நாற்றம், பல் வீக்கம் போன்றவற்றிற்கு இதன் சாறை வாயில் 10 நிமிடம் வைத்திருந்தால் போதும்.

கிராம்புவின் உலர்ந்த பூ மொட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உள்ளதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் எதிப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கிறது.

சர்கரை நோயாளிகள் இதனை உண்ணலாம். இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதால் இரத்தத்தில் சர்கரை அளவு கட்டுபடுத்தபடும்.

கிராம்பை உணவில் அடிக்கடி உட்கொண்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து தொப்பை குறையும். இது கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைத்து கல்லீரலை சுத்தபடுத்தும். Thanks isakki 5555

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக