வியாழன், 19 ஏப்ரல், 2018

தொற்றுநோய் வரப்போகிறது?! உஷாராக இருங்கள்!

தொற்றுநோய் வரப்போகிறது?! உஷாராக இருங்கள்! 



தொற்றுநோய் வரப்போகிறது?! உஷாராக இருங்கள்!

என்ன தான் அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்தாலும், பல சம்பவங்கள், நம்மை மீறித்தான் நடக்கிறது. சென்னையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, பெருவெள்ளம் ஏற்பட்டது. யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
 
இந்த வெள்ளத்தைப் பற்றி, பஞ்சாங்கத்திலே, “மழைவெள்ளம் வந்து விமான நிலையத் மூழ்கடிக்கும்” என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால், அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. வெள்ளம் வந்து அவதிப்பட்ட பின்னர் தான் உணர்ந்தனர்.
இதே போல், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. பக்தர்களின் கனவில் வந்து ஆண்டவன் சொன்ன படி பக்தர்கள், இந்தக் கோயில் மண்டபத்தில் உள்ள கண்ணாடிப் பெட்டியில், சம்பந்தப்பட்ட பொருளை வைப்பார்கள்.
அதன் படி தான், பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் ஒரு பக்தரின் கனவில் ஆண்டவன் வந்து சொன்னதால், ஜனவரி 6-ஆம் தேதி, கணக்கு வழக்கு நோட்டு ஒன்று வைத்து பூஜிக்கப்பட்டது. இதனை அடுத்து, ஜி.எஸ்.டி., மற்றும் வருமானவரித்துறையின் ரெய்டுகள் அதிகமானது.
தற்போது, ஒரு பக்தரின் கனவில் கடவுள் மிளகு, அருகம்புல், கீழாநெல்லி ஆகியவற்றை வைக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இங்கு கோயிலில் பூ போட்டு பார்த்து விட்டு, இந்த மூன்று பொருட்களையும் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைத்துள்ளனர்.
மிளகு, அருகம்புல், கீழாநெல்லி போன்றவை, மருத்துவக் குணம் நிறைந்தவை. பெரும்பாலும், தொற்று நோய் எதுவம் பரவாமல் இருப்பதற்காகத் தான், நம் முன்னோர்கள் பாரம்பரியமாக, மருத்துவ மூலிகைப் பொருட்களாக இவற்றை உபயோகித்து வந்தனர்.
தற்போது கடவுள் உத்தரவுப்படி இந்த பொருட்கள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப் பட்டுள்ளது. இதனால், மக்களிடையே தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட உள்ளது, என்று இந்தக் கோயிலில் உள்ள சிவாச்சாரியரர்கள் கூறி உள்ளனர். Thanks Seithipunal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக