*பெண்களின் “பின்புறம்” அழகாக இருக்க எளிய உடற்பயிற்சி!*
சிலருக்கு “ஒன்றுமே இல்லையே” என்ற கவலை. சிலருக்கு “அளவுக்கு மீறி” அசிங்கமாக இருக்கிறதே என்று வருத்தம். எது சரியான அளவு என்று அளவீடு எதுவும் கிடையாது. ஆனால் பொது இடத்திற்கு வரும்போது “ஐயோ எனக்கு மட்டும் இப்படி இருக்கிறதே” என்று தாழ்வு மனப்பான்மை இருக்க கூடாது.
சும்மாவே கண்ணாடி முன் நின்று முன்னும் பின்னும் பார்க்கும் பெண்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னை தான். அதுவும் எவ்வளவு அழகான டிரஸ் போட்டாலும் – எடுத்து காட்டாமல் ஏனோ தானோ என்று இருப்பது அல்லது பிதுங்கி வழிவது என்று ரெண்டுமே மைனஸ் பாய்ண்ட் தான்.
ஆண்களுக்கு வயிற்றில் கொழுப்பு சேர்வது போல பெண்களுக்கு முழங்கைக்கு மேலேயும், இடுப்பு பக்கவாட்டிலும், பின் தொடைகளின் மேற்புறத்திலும் சேர்வதுண்டு. பின்பக்கத்தில் அளவு சரியாக இல்லையென்றால் நடை கூட வாத்து மாதிரி மாறிவிடும்.
மேற்கத்திய நாடுகளில் ஜிம்முக்கு போய் உடம்பை கரெக்ட் செய்து கொள்ளும் வசதி எல்லா பெண்களுக்கும் இருக்கிறது. நம்ம ஊரில் அந்த அளவுக்கு ஜிம் வசதி எல்லா இடங்களிலும் இல்லை. இருந்தாலும் அதை பயன்படுத்தி கொள்ளும் அளவுக்கு இந்திய பெண்களுக்கு நேரமோ வசதியோ சுதந்திரமோ இருப்பதில்லை.
ஸ்குவாட் எனப்படும் அமர்ந்து எழுந்து செய்யும் மிக எளிய உடற்பயிற்சி மூலம் வீட்டில் இருந்தபடியே எந்த வித உபகரணங்களும் இல்லாமல் பின்புற வடிவமைப்பை சரி செய்யலாம்.
இந்த பயிற்சி இடுப்பு, தொடைகள், முழங்கால்கள், கால்கள் போன்றவற்றை உறுதி செய்வதுடன் காலப்போக்கில் பின்புறத்தையும்அ ழகிய வடிவமைப்பாக மாற்றுகிறது.
இதற்கு முக்கியம் பொறுமை. அரச மரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டு பார்ப்பதெல்லாம் இந்த விசயத்தில் நடக்காது. அது மட்டுமல்லாமல் – உடற்பயிற்சிக்கு நிலைத்தன்மை (continuity) ரொம்ப ரொம்ப அவசியம். ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை செய்துவிட்டு – ஒன்னும் நடக்கலியே என்று சொன்னால் நடக்காது தான்.
*ஸ்குவாட் என்பது என்ன?*
அது வேறு ஒன்றுமில்லை. நமக்கு இது புதிதுமில்லை. உக்கார்ந்து உக்கார்ந்து எழுந்திருப்பதை தான் ஸ்குவாட் என்று பெயரிட்டிருக்கிறார்கள். மேலை நாடுகளில் தரையில் உக்காருவது என்பது மிக மிக அபூர்வம். இப்ப நம்ம நாட்டிலும் உட்காருவதென்றால் நாற்காலி, ஷோபா என்றாகி விட்டது. பாத்ரூமில் “இருப்பது” கூட நாற்காலி வடிவில் தான். ஆக தரையில் இருப்பது இல்லாது போகும்போது – அதை அறிமுகப்படுதும்போதே உடற்பயிற்சி என்றாகிவிட்டது.
*எப்படி செய்வது?*
சற்றே காலை அகட்டி வைத்து உங்கள் பாதங்களில் நிமிர்ந்து நில்லுங்கள்நேராக பாருங்கள். சுவற்றில் ஏதாவது ஒரு பாயின்ட் அல்லது ஒரு படம் உங்கள் கண்ணுக்கு முன்பாக இருப்பது நல்லது. (எல்லாம் ஒரு கவனத்துக்கு தான்!)இரண்டு கைகளையும் நேராக நீட்டுங்கள். அல்லது மடக்கி முகத்துக்கு கீழே வைக்க வேண்டும்.உங்கள் உடம்பின் மொத்த வெயிட்டும் பாதங்களுக்கு செல்லவேண்டும்.இப்போது உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருங்கள்“பின்பக்கம்” கீழே உட்காரும்போது முழங்காலுக்கு கீழே செல்ல வேண்டும்மொத்த வெயிட்டும் கால்களை அழுத்த வேண்டும்.ஒவ்வொரு 15 தடவைக்கும் அரை நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம்.
*என்ன பிரச்னை வரும்?*
ஒரு பிரச்னையும் வராது. உங்கள் உடம்பு ரொம்ப நாட்கள் வளையாது இருப்பதால் முதல் தடவை செய்யும்போது பேலன்ஸ் கிடைக்காது; ரொம்ப மூச்சு வாங்கும்; முட்டி வலிப்பது மாதிரி தெரியும். சில பேருக்கு அப்போதைக்கு ஒன்றும் தெரியாது. அடுத்த நாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது கால்கள் வலிப்பது போல தோன்றும். அதோடு வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டால் எல்லாம் அதோடு நின்று விடும். விடா முயற்சி தான் வெற்றியே
*மாற்றங்கள் எப்போது தெரியவரும்?*
அது உங்கள் தொடர்பயிற்சி மற்றும் ஈடுபாட்டை பொருத்தது. முன்பே சொன்னது போல பத்து நாளில் பின்னால் திரும்பி பார்த்து ஏதாவது தெரிகிறதா என்றால் தெரியாது தான். அதோடு விடாமல் தொடர்ச்சியாக செய்யும்போது இரண்டு முதல் மூன்று மாதத்திற்குள் மாற்றங்கள் தொடங்க ஆரம்பிக்கும். உங்கள் லட்சியமே “வடிவாக” மாற்றவேண்டும் என்பதால் தொடர் முயற்சியே “வெற்றியை” தேடி தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக