புதன், 11 ஏப்ரல், 2018

இது தெரிஞ்சா.. இலவங்கப்பட்டையுடன் தேன் சேர்த்து நீங்களும் மறக்காம குடிப்பீங்க..!

இது தெரிஞ்சா.. இலவங்கப்பட்டையுடன் தேன் சேர்த்து நீங்களும் மறக்காம குடிப்பீங்க..!

இலவங்கப்பட்டை மற்றும் தேனின் சிறப்புக்கள் நாம் அனைவரும் அறிந்ததே.
இவை இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிறப்புக்கள் உங்களுக்குத் தெரியுமா? இவற்றின் சிறப்புக்களை அறிந்ததால் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்தில் இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.
இவை இயற்கை முறை என்பதால் பக்க விளைவுகளின்றி பல நோய்களை குணப்படுத்த உதவுகின்றது. இந்த முறைகளில் சுத்தமான தேனைப் பயன்படுத்துவது முக்கியமானது.

மருத்துவ குண்ங்கள்
கீல்வாதம்
தொடர்ச்சியான வலிக்கு ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு இலவங்கப்பட்டை பவுடரைச் சேர்த்து சூடான நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.
காலை உணவுக்கு முன்னர் குடித்து வருவதால் அசைக்க முடியாத உடற்பகுதிகளை அசைக்க முடியும்.
சமிபாடு இன்மை
இரண்டையும் சேர்த்து உணவுக்கு முன் எடுத்து வந்தால் சமிபாடு சீராகுவதுடன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்க முடியும்.
சோம்பல்
½ தேக்கரண்டி தேன், சிறிதளவு இலவங்கப்பட்டையை சூடான நீருடன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி அடந்து சோம்பலை முறிக்கும்.
கொழுப்பைக் குறைத்தல்.
கொழுப்பைக் குறைப்பதற்கு 2 மேசைக்கரண்டி தேனுடன் 3 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பவுடரைச் சேர்த்து ஒரு நாளிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் பலனைப் பெற முடியும்.
வயிற்றுக் கோளாறு
தேனுடன் சேர்த்து இலவங்கப்பட்டை எடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன், வயிற்றெரிச்சலைக் குறைக்கும்.
இருமல் மற்றும் சைனஸ் பிரச்சினை
ஒரு தேக்கரண்டி தேனுடன் ¼ தேக்கரண்டி இலவங்கப்பட்டை பவுடரை சூடான நீரில் சேர்த்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் இருமல், சைனஸ் தொல்லை முற்றாக நீங்கும்.
இதய நோய்கள்
தேன் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து ஜாம் போன்று தாயாரித்து வைக்கவும்.
காலை உணவுகளான பாண், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுவதனால், கொழுப்பைக் கட்டுப்படுத்தல், மாரடைப்பைத் தடுத்தல், நாடிகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல், சுவாசத்தை இலகு படுத்தல், இதயத்துடிப்பை சீராக்குதல்.
போன்ற பல நன்மைகளைச் செய்கின்றது.
முடி உதிர்வைத் தடுத்தல்
ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டையுடன் ஒரு மேசைக்கரண்டி தேன் மற்றும் சிறிதளவு ஒலிவ் எண்ணெய் சேர்த்து பசை போன்று தாயாரிக்கவும்.
இதை குளிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்னர் தலையில் தடவி குளித்தால் முடி உதிர்வை தடுக்க முடியும்.
பருக்கள்
3 மேசைக்கரண்டி தேனுடன் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பவுடரைச் சேர்த்து பருக்களின் மீது இரவு நேரங்களில் தடவி, காலையில் நீரினால் கழுவவும். தொடர்ந்து 2 வாரங்கள் செய்வதனால் பருக்கள் நீங்கும்.
சரும நோய்கள்
சம அளவு தேன், இலவங்கப்பட்டை சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவதால் சரும நோய்கள் நீங்கும்.
வாய் துர்நாற்றம்.
இரண்டையும் சேர்த்து நீருடன் கலந்து தினமும் கொப்பளித்து வருவதால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
பற்சிதைவு
ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டையுடன் 5 தேக்கரண்டி தேனைச் சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களின் மீது தினமும் 3 வேளைகள் தடவி வந்தால் பற்சிதைவை தடுக்கலாம். Thanks Today Jaffna

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக