வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தலைக்கு தலையணை வைத்து துங்கலாமா ?


தலைக்கு தலையணை வைத்து துங்கலாமா ?

💆 இன்றைய சூழ்நிலையில் பலருக்கு தலையணை இல்லாதா தூக்கம் என்பது உப்பில்லாத உணவு போலதான் அவ்வளவு கஷ்டமாக இருக்கும்.

💆 தலையணை வைத்து உறங்குவது என்பது நமது உடலுக்கு சுகமானதாக இருந்தாலும், அது நமது உடலுக்கு தீங்கானது என சொல்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

💆 தலையணை வைத்து உறங்கும் பழக்கம் என்பது, ஆதி வாசிகளிடமோ, அதன் பின்னர் வந்தவர்களிடமோ இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

💆 சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே மிருதுவான தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது

💆 நாம் நடக்கும்போது எப்படி உடலை நேராக வைத்து நடக்கிறோமோ, அதுபோலத்தான் உறங்கும் போதும், மேடு பள்ளம் இல்லாத சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும்.

💆 அப்படி படுக்கும் போது, எக்காரணத்தை கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்துதான் தூங்க வேண்டும்.

💆 மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய மிருதுவான தலையணையை தலைக்கு வைப்பது ஆகியவற்றால், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

💆 அதுமட்டுமல்லாமல் கழுத்து நரம்புகளும் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்புகளில் தொடங்கி பலவிதமான பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கிறதாம்.

💆 என்னால் தலையணை இல்லாமல் ஒருநாளும் தூங்க முடியாது என்பவர்கள், தலையணையை தலைக்கு மட்டும் வைக்காமல், தோள்பட்டையிலிருந்து தலை முழுவதற்கும் வைப்பது நல்லது.

💆 நாம் தான் தலையணைக்கு அடிமையாகிவிட்டோம். அதனால், முடிந்தவரை தலையணை பயன்படுத்துவதை குறைத்து. தலையணை இல்லாமல் சமமான தரையில் உறங்க பழகிடுவோம்.

💆 அதுமட்டுமல்லாமல், தலையணை வைத்து தூங்குவது நல்லதில்லை என்பதை அடுத்த தலைமுறையினருக்கு அழுத்தமாகச் சொல்லி அவர்களின் ஆரோக்கியத்திற்கு வித்திடுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக