புதன், 11 ஏப்ரல், 2018

விரைவில் வரும் ஆபத்தை இப்போதே தடுத்து நிறுத்துங்கள். இல்லையென்றால் மிகவும் கடினம்.

விரைவில் வரும் ஆபத்தை இப்போதே தடுத்து நிறுத்துங்கள். இல்லையென்றால் மிகவும் கடினம்.


இன்றைக்கு பலரும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இளம் வயதிலேயே மூட்டு வலிக்கு உள்ளாகின்றனர். இதற்கு பல மருத்துவர்களை பார்த்தும் மூட்டுவலி குறைந்த பாடில்லை. மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரையை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

இரண்டு கைப்பிடி அளவு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்து கொள்ள வேண்டும். தண்டு இலை என எல்லாவற்றையும் பயன்படுத்தலாம்.
இவற்றுடன்
  • பூண்டு 4 பல்
  • இஞ்சி சிறிய துண்டு சிறிய வெங்காயம் ஒன்று
  • மிளகு அரை தேக்கரண்டி
  • சீரகம் அரை தேக்கரண்டி
இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் குணமாகும்.

மேலும் இந்த முடக்கத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிடலாம். இதனால் முதுகு தேய்மானம் இருப்பவர்கள் மற்றும் கீழ் வாதம், கால்களை மடக்க முடியாமல் இருப்பது மற்றும் நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.

அதே போன்று முடக்கத்தான் கீரையை எண்ணெயில் இட்டு காய்ச்சி மூட்டு வலிக்கு தேய்த்து வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக குணமாகும். பொதுவாக இத்தகைய நோய்கள் வருவதற்கு முன்பே இதை சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது முதிர்ந்த அனைவரும் இதை சாப்பிட்டு வருவது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் அந்த வயதில் தான் கால்கள் மிகவும் வலிக்க ஆரம்பிக்கும்.

எனவே இதை செய்யது சாப்பிட்டு வாருங்கள். இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்டில் பதிவு பண்ணுங்க. நன்றி வணக்கம். Thanks Trending Tamil 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக