ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

இட்லி எங்கு தோன்றியது..இன்று உலக இட்லி தினம்! #worldIdliDay

உலக இட்லி தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் இட்லியின் வரலாற்றை அறிவோம். 
தமிழர்களின் அன்றாட உணவில் இட்லி ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. என்னதான் நவ நாகரீக உணவுகளை நாம் தேடி தேடி சாப்பிட்டாலும் வீட்டில் அம்மா செய்கிற இட்லிக்கு ஈடு இணையே இல்லை எனலாம்.

ஆவி பறக்கும் இட்லியை, சாம்பாரில் முக்கி, சட்னியில் தடவி சாப்பிடும் சுவை.......ஆஹா.. அலாதியானது. 

அவித்தல் என்ற பொருளிலிருந்து 'இட்டவி'என வழங்கப்பட்டு,  அதன்பின் இட்லி என மாறியிருக்கலாம் என்கிறார்கள்.

இட்லி உலகின் சத்தான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆவியில் வெந்து மிருதுவாக இருக்கும் இட்லியில் உடலுக்கு தேவையான இரும்பு, துத்தநாகம், ப்ரோட்டின் என அனைத்தும் கிடைக்கிறது.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவிலுள்ள பிற நகரங்களின் உணவு முறையைக் காட்டிலும், தென்னிந்தியாவின்  உணவுப் பழக்கம் மிகவும் ஆரோக்கியமானது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது மெண்மையாக உள்ளதால், வயிற்றில் எளிதாக செரிக்கிறது.

இட்லி முன்னர் பழுப்பு நிறத்திலே இருந்தது என்றும் சமீபத்தில் தான் சீனி மற்றும் இட்லி ஆகியவை வெள்ளையடிக்கப்பட்டிருப்பதாக சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறுகிறார்.

சாம்பார்,சட்னி என டிரேட்மார்க் சைடு டிஷ்களை வைத்து சாப்பிடும் இட்லி தென்னிந்தியா முழுக்க பிரபலமான உணவு என்றாலும், இட்லியின் பிறப்பிடம் எது என்ற சர்ச்சை நீண்ட நாட்களாகவே தொடர்ந்து வருகிறது.

சங்கப் பாடல்களில் தோசையைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளதாகவும் இட்லி பற்றிய குறிப்பு ஏதும் இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். 

இந்தோனேசியாவில் இருந்த இந்து மன்னர்களின் சமயல்காரர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம் என்றும் அவர்கள் 800- களில் இதனை இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்று பிரபல உணவு வரலாற்று அறிஞர் கே.டி.ஆச்சாரியா கூறுகிறார்.

ஆனால் பாரம்பரிய உணவு வல்லுநனரும், சித்த மருத்துவருமான பால ராமசுப்ரமணியன் கூறுகையில்:

"கடந்த ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட பாரம்பரிய உணவே இட்லி.

சங்க இலக்கியங்களில் இட்லியை நேரடியாகச் சொல்கின்ற பாடல்கள் இல்லையென்றாலும், இட்லி மாவில் பயன்படுத்தப்படும் பொருட்களின் கலவை குறித்த பாடல்கள் காணப்படுகின்றன.

இது அநேகமாக முற்கால சோழர் காலத்தில் அல்லது பக்தி இயக்க எழுச்சியின்போது வைணவ தாக்கத்தின் விளைவாக இட்லி உணவு வெகு மக்களின் உணவாக மாறியிருக்க வேண்டும்.

அகத்தியர் குணபாடத்திலும், பழைய ஆயுர்வேத நிகண்டுகளிலும் இட்லி குறித்த பாடல்கள் காணப்படுகின்றன.

வெறு மாவில் இட்டலிக்கு வேகம் அறும் - காரம்
பெரு மாவில் இட்டலியை பேசில் - அரும் அனிலம்
ஐய திட்டங்கள் அதிகரிக்குமோ  மாறன்
நைய பெய்யுங் கண்ணாய் நவில்
" என்கிறது குணபாடம்" என்கிறார்.

சமீபத்தில் ரசகுல்லாவுக்கு உரிமை கோரியது போல நாமும் இட்லிக்கு உரிமை கோருவோம். 

இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம். இட்லியை சுவைத்து சாப்பிட்டு கொண்டாடுவோம்!

தமிழர்களின் அன்றாட உணவில் இட்லி ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. என்னதான் நவ நாகரீக உணவுகளை நாம் தேடி தேடி சாப்பிட்டாலும் வீட்டில் அம்மா செய்கிற இட்லிக்கு ஈடு இணையே இல்லை எனலாம்.

ஆவி பறக்கும் இட்லியை, சாம்பாரில் முக்கி, சட்னியில் தடவி சாப்பிடும் சுவை.......ஆஹா.. அலாதியானது.
அவித்தல் என்ற பொருளிலிருந்து
'இட்டவி'
என வழங்கப்பட்டு,  அதன்பின் இட்லி என மாறியிருக்கலாம் என்கிறார்கள்.
இட்லி உலகின் சத்தான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆவியில் வெந்து மிருதுவாக இருக்கும் இட்லியில் உடலுக்கு தேவையான இரும்பு, துத்தநாகம், ப்ரோட்டின் என அனைத்தும் கிடைக்கிறது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவிலுள்ள பிற நகரங்களின் உணவு முறையைக் காட்டிலும், தென்னிந்தியாவின்  உணவுப் பழக்கம் மிகவும் ஆரோக்கியமானது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது மெண்மையாக உள்ளதால், வயிற்றில் எளிதாக செரிக்கிறது.
இட்லி முன்னர் பழுப்பு நிறத்திலே இருந்தது என்றும் சமீபத்தில் தான் சீனி மற்றும் இட்லி ஆகியவை வெள்ளையடிக்கப்பட்டிருப்பதாக சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறுகிறார்.
சாம்பார்,சட்னி என டிரேட்மார்க் சைடு டிஷ்களை வைத்து சாப்பிடும் இட்லி தென்னிந்தியா முழுக்க பிரபலமான உணவு என்றாலும், இட்லியின் பிறப்பிடம் எது என்ற சர்ச்சை நீண்ட நாட்களாகவே தொடர்ந்து வருகிறது.
சங்கப் பாடல்களில் தோசையைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளதாகவும் இட்லி பற்றிய குறிப்பு ஏதும் இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
இந்தோனேசியாவில் இருந்த இந்து மன்னர்களின் சமயல்காரர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம் என்றும் அவர்கள் 800- களில் இதனை இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்று பிரபல உணவு வரலாற்று அறிஞர் கே.டி.ஆச்சாரியா கூறுகிறார்.
ஆனால் பாரம்பரிய உணவு வல்லுநனரும், சித்த மருத்துவருமான பால ராமசுப்ரமணியன் கூறுகையில்:
"கடந்த ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட பாரம்பரிய உணவே இட்லி.
சங்க இலக்கியங்களில் இட்லியை நேரடியாகச் சொல்கின்ற பாடல்கள் இல்லையென்றாலும், இட்லி மாவில் பயன்படுத்தப்படும் பொருட்களின் கலவை குறித்த பாடல்கள் காணப்படுகின்றன.
இது அநேகமாக முற்கால சோழர் காலத்தில் அல்லது பக்தி இயக்க எழுச்சியின்போது வைணவ தாக்கத்தின் விளைவாக இட்லி உணவு வெகு மக்களின் உணவாக மாறியிருக்க வேண்டும்.
அகத்தியர் குணபாடத்திலும், பழைய ஆயுர்வேத நிகண்டுகளிலும் இட்லி குறித்த பாடல்கள் காணப்படுகின்றன.
வெறு மாவில் இட்டலிக்கு வேகம் அறும் - காரம்
பெரு மாவில் இட்டலியை பேசில் - அரும் அனிலம்
ஐய திட்டங்கள் அதிகரிக்குமோ  மாறன்
நைய பெய்யுங் கண்ணாய் நவில்
" என்கிறது குணபாடம்" என்கிறார்.
சமீபத்தில் ரசகுல்லாவுக்கு உரிமை கோரியது போல நாமும் இட்லிக்கு உரிமை கோருவோம்.
இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம். இட்லியை சுவைத்து சாப்பிட்டு கொண்டாடுவோம்!    Thanks  Tamil Eenadu India

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக